Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?
காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
காலை முதல் இரவுவரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது.
பல் துலக்குவது தொடங்கி இரவில் உறங்கச் செல்வதுவரை ஒவ்வொன்றுக்கும் சில வரையறைகள் உள்ளன. அவற்றை மீறாமல் அந்தச் செயல்களைச் செய்தால் ஆரோக்கியம் மேம்படும். எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும். விளக்குகிறார் பொது மருத்துவர் சிவராமக் கண்ணன்.

குறைந்தது 15 நிமிடங்கள் உடல்மீது வெயில்படுமாறு நிற்க வேண்டும். இது நம் உடலியக்கக் கடிகாரத்தைச் சரியாக இயங்கவைக்கும். சரியான நேரத்தில் தூங்கவும், கண் விழிக்கவும் உதவும்.
தினமும் 15 நிமிடங்கள் தியானம் செய்தால், அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். மன அழுத்தங்களிலிருந்தும் விடுபடலாம்.

காலை உணவு எடுத்துக்கொள்ளத் தகுந்த நேரம் இது. காலை உணவைத் தவிர்த்தால், சர்க்கரைநோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.
‘காலை உணவைச் சாப்பிட்டதும், தசைகளுக்கான சிறிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். அதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்’ என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மிகவும் சவாலான செயல்களைச் செய்யவும், துல்லியமான முடிவுகளை எடுக்கவும் உகந்த நேரம் இது. இந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்தாலும் மிகவும் திறமையாகச் செயல்பட முடியும்.
புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்வைத்திருக்க இது உதவும். உடலிலுள்ள செல்களுக்கு நிலையான ஆற்றலைக் கொடுக்கும்.
மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும், 30 நிமிடங்கள் நடப்பது அவசியம். இதனால், தேவையற்ற மன அழுத்தம் நீங்கும்; மதிய நேரத்தில் செய்யும் பணிகளை சிறப்பாகச் செய்யவும் இது உதவும்.
தசைகள் மிகச் சூடான நிலையிலிருக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் யோகா போன்ற உடற்பயிற்சிகளைச் செய்தால், உடல் சூடு நீங்கும்; இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.

இரவு உணவை 7:30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அப்போதுதான் நிம்மதியான உறக்கம் வரும்.
எழுதுவது, ஓவியம் வரைவது, கைவினைப் பொருள்கள் செய்வது போன்ற ஆக்கபூர்வமான, படைப்புத்திறன் சார்ந்த வேலைகளைச் செய்ய உகந்த நேரம். குறிப்பாக, புதிய சிந்தனைகள் உதிக்கும் நேரம் இது.

ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் போன்ற மின்னணுக் கருவிகளை ஆஃப் செய்ய வேண்டிய நேரம் இது. அவற்றிலிருந்து வெளிப்படும் யு.வி விளக்கொளி, தூக்கத்துக்கு உதவும் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியைக் கெடுத்துவிடும்.
தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர், குளிக்க வேண்டும். இது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். நல்ல தூக்கம் வர வழி செய்யும்.