கரூர் பலி: நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன! - ப.சிதம்பரம்
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.29) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தொடா் விடுமுறை: 1,600 தனியாா் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம்!