அஜித்: ``சினிமா, ரேஸிங் இரண்டையும் என் குழந்தைகள் மீது திணிக்க மாட்டேன், ஆனால்''...
வீட்டைவிட்டு புறப்பட்ட விஜய்! எங்கே சென்றார்?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டு, பட்டினம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார்.
கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவத்து அன்றிரவு கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சாலை வழியாக காரில் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் கூடியிருந்த செய்தியாளர்களை சந்திக்காமல், நீலாங்கரை வீட்டுக்குச் சென்ற விஜய், எக்ஸ் தளத்தில் இரங்கலை பதிவிட்டிருந்தார்.
தொண்டர்களும் மக்களும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் அறிந்தும், திருச்சியில் இருந்து கரூருக்கு திரும்பாமல், சென்னை வந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இதனிடையே, கடந்த 36 மணிநேரமாக நீலாங்கரை வீட்டிலேயே தங்கியிருந்த விஜய், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களை மட்டும் சந்தித்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணியளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் புறப்பட்ட நிலையில், அவர் கரூர் செல்வதாக பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு விஜய் சென்றுள்ளார்.
தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் செல்வதற்கு அனுமதியும் பாதுகாப்பும் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.