செய்திகள் :

தொடர் மழை எதிரொலி! உச்சம் தொடும் ஏரிகளின் நீர்மட்டம்!

post image

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகும்.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி, நகரின் நீர்த்தேக்கங்களில் ஒட்டுமொத்த நீர் இருப்பு 68.87 சதவிகிதமாக இருந்தது, இது கடந்த நான்கு ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் பதிவான அதிகபட்ச அளவாகும் என தரவுகள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்ததன் எதிரொலியாக இந்த ஆண்டு நகரின் குடிநீர் இருப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.

இதனால், 2026 கோடைக் காலம் வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வளத் துறையின் தரவுகளின்படி, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகபட்ச உயர்வைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த நேரத்தில் நீர்வரத்து 330 கன அடி மட்டுமே இருந்தது மற்றும் நீர் இருப்பு 4.39 சதவிகிதமாக இருந்தது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்வரத்து 680 கன அடியைத் தொட்டது நீர் இருப்பு 77.93 சதவிகிதமாக இருக்கிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீர்வரத்து 106 சதவிகிதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகம் 2,412 மில்லியன் கனஅடி தண்ணீரை மட்டுமே பெற்றுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு கோடைக் காலத்தின் சென்னை நகரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தற்போதைய நீர்த்தேக்க அளவுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு நீர் இருப்பு 1.117 டிஎம்சி அடி (30.64%) ஆக இருந்தது. திங்கள்கிழமை, இது 1,788 மில்லியன் கன அடி (48.15%) ஆக இருந்தது. வடமேற்கு பருவமழையின் போது நகரத்தில் அவ்வப்போது பலத்த மழை பெய்ததால் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

புழல் ஏரிக்கு நீர்வரத்து 26 கன அடியாக உள்ளது. அதன் மொத்த நீர் கொள்ளவு 50 கன அடியாக இருக்கும் நிலையில், 2928 மில்லியன் கன அடி நீர் நிரம்பியிருக்கிறது.

இளைஞர் தீக்குளிக்க முயற்சி! காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு ... மேலும் பார்க்க

சென்னையிலிருந்து செங்கோட்டை, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்!

ஆயுத பூஜையையொட்டி சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் இடையே நாளை(செப். 30) சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 06075 சென்னை எழும்பூரில் இருந்து நாளை(செப். 30) இரவு 10.15... மேலும் பார்க்க

கரூர் பலி: நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன! - ப.சிதம்பரம்

கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்... மேலும் பார்க்க

கரூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பார்வையிடவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் வருகை தந்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசார பயணம் மேற்... மேலும் பார்க்க

வீட்டைவிட்டு புறப்பட்ட விஜய்! எங்கே சென்றார்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டு, பட்டினம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார்.கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட ந... மேலும் பார்க்க

கரூர் பலி: விஜய்யுடன் ராகுல் காந்தி பேச்சு!

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து, தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார்.ராகுல் காந்தி கரூர் கூட்ட நெர... மேலும் பார்க்க