குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்; மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய வெற்றி ஓட்டம்
மதுரை, செப்டம்பர் 28, 2025: சர்வதேச குழந்தைப்பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாத அனுசரிப்பின் ஒரு பகுதியாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை ‘வெற்றி ஓட்ட மாரத்தான்’ என்ற நிகழ்வை இன்று சிறப்பாக நடத்தியது.
குழந்தைப்பருவ புற்றுநோய் பாதிப்பிலிருந்து, சிகிச்சையினால் வெற்றிகரமாக விடுபட்டு உயிர்வாழும் சிறார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 500-க்கும் மேற்பட்ட நபர்கள் இதில் பங்கேற்றது, புற்றுநோயை வெல்ல முடியும் மற்றும் அதன் கடுமையான பாதிப்பிலிருந்து மீண்டு துடிப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்ற மனஉறுதியையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் தொடங்கி, மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நிறைவடைந்த மாரத்தான் ஓட்டத்தில், S.R. டிரஸ்டின் செயலாளர் மற்றும் அறங்காவலர் Ms. C. காமினி குருசங்கர், மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி டாக்டர். B. கண்ணன் மற்றும் குழந்தைகளுக்கான இரத்தப் புற்றுநோயியல் துறைத்தலைவர் மற்றும் முதுநிலை நிபுணரான டாக்டர் காசி விஸ்வநாதன் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். மேலும் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் துறை நிபுணர்களான டாக்டர் அன்னபூரணி, டாக்டர் அனிதா மற்றும் டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் இதில் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாரத்தான் ஓட்டத்திற்கு பிறகு நடைபெற்ற நிகழ்வில், புற்றுநோயிலிருந்து மீண்டு வாழும் இளம் சிறார்கள் சிறப்பான நடன கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாறுவேடப் போட்டி ஆகியவற்றின் வழியாக தங்களது உள்ளார்ந்த திறன்களை அழகாக வெளிப்படுத்தினர். இளவயது புற்றுநோயிலிருந்து மீண்டு இப்போது வயதுவந்த நபர்களுள் சிலர், தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து உத்வேகம் அளிக்கும் செய்திகளை பகிர்ந்துகொண்டது, இளம் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் வழங்கியது.
மருத்துவமனை பணியாளர்கள் வழங்கிய ஒரு உணர்வுப்பூர்வ ஓரங்க நாடகம், இந்த நிகழ்வில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குழந்தைப் பருவ புற்றுநோய் என்பது, அதிக அளவில் குணப்படுத்தக்கூடியதே என்ற ஆற்றல் மிக்க செய்தியை இந்த ஓரங்க நாடகம் வழங்கியது. புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டாலும், தளராத நம்பிக்கையோடு உரிய நேரத்திற்குள் சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தையும், அதன்மூலம் குணம் பெற முடியும் என்ற வலுவான செய்தியையும் இது அடிக்கோடிட்டுக் காட்டியது.
சிறப்புரை ஆற்றிய Ms. காமினி குருசங்கர், புற்றுநோய் சிகிச்சையின் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஒவ்வொரு குழந்தையும், நாம் அனைவரும் பாராட்டி கொண்டாடப்பட வேண்டிய ஒரு கதாநாயகன் / கதாநாயகி தான். இன்று நடைபெற்ற ‘வெற்றி ஓட்டம்’ என்ற இந்நிகழ்வானது, ஓட்டப்பந்தயத்தின் இறுதிக்கோட்டை கடப்பது மட்டுமல்ல; தைரியத்தை கௌரவிப்பதாகவும், மருத்துவ முன்னேற்றத்தை கொண்டாடுவதாகவும், நம்பிக்கை வெளிச்சத்தைப் பரப்புவதாகவும் இது இருக்கிறது.
இந்தியாவில் கண்டறியப்படும் மொத்த புற்றுநோய்களில் சுமார் 4% மட்டுமே குழந்தைப்பருவ புற்றுநோய்களாக இருக்கின்ற போதிலும், அக்குழந்தைகளின் குடும்பங்கள் மீது உணர்வு ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை இது ஏற்படுத்துகிறது. சிகிச்சையில் நவீன முன்னேற்றங்களினால் பெரும்பாலான புற்றுநோய்கள் இப்போது அதிக அளவில் குணப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன மற்றும் உயிர்பிழைப்பு விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது நமக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு நல்ல செய்தியாகும். MMHRC - ல் 80% என்ற வெற்றி விகிதத்தை அடைந்திருப்பது எங்களுக்கு பெருமிதத்தையும், திருப்தியையும் தருகிறது.” என்று குறிப்பிட்டார்.
குழந்தைகளுக்கான இரத்தப் புற்றுநோயியல், இரத்தவியல் மற்றும் எலும்புமஜ்ஜை மாற்று சிகிச்சை துறைத்தலைவர் மற்றும் முதுநிலை நிபுணரான டாக்டர் காசி விஸ்வநாதன் பேசுகையில், “தென் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சையில் முதன்மை மருத்துவ மையமாக எமது மருத்துவமனை இயங்கி வருகிறது. 2010-ம் ஆண்டிலிருந்து புற்றுநோய்கள் மற்றும் இரத்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 2500-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
இரத்தப் புற்றுநோய் இருந்த ஏறக்குறைய 1000 குழந்தைகளுக்கும் மற்றும் திடமான (நியூரோபிளாஸ்டோமா, மூளைக் கட்டிகள், சிறுநீரகக் கட்டிகள் மற்றும் சாற்றுப்புற்று உட்பட) புற்றுக்கட்டிகள் உருவாகியிருந்த சுமார் 700 குழந்தைகளுக்கும் இங்கு தரமான சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. உயிருக்கு ஆபத்தான இரத்தக்கோளாறுகள் மற்றும் புற்றுநோய்கள் இருந்த சுமார் 400 நபர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தென் தமிழ்நாடு முழுவதிலும், குறிப்பாக மதுரையிலும் புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் உறுப்புமாற்று சிகிச்சையில் எமது முழுமையான அணுகுமுறையானது, மேம்பட்ட, உயிர்காக்கும் சிகிச்சை செயல்முறைகளை குழந்தைகள் எளிதாக பெறுவதை உறுதிசெய்யும். தங்களது வசிப்பிடங்களிலிருந்து வெகுதூர மருத்துவமனைகளுக்கு பயணிக்க வேண்டிய அவசியத்தை அகற்றியிருக்கிறது.” என்று கூறினார்.
குழந்தைகளில் லுகேமியா, லிம்போமா, மூளை கட்டிகள் மற்றும் திட புற்றுக்கட்டிகள் போன்ற வெவ்வேறு வகை புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் சிறப்பு நிபுணத்துவத்துடன் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் மருத்துவத்தில் MMHRC முன்னிலை வகிக்கிறது. மிக நவீன மருத்துவ தொழில்நுட்பம், மேம்பட்ட சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் கனிவான சேவை ஆகியவற்றைப் பயன்படுத்துகின்ற மருத்துவமனையின் அர்ப்பணிப்பு மிக்க குழந்தைகளுக்கான புற்றுநோயியல் சிகிச்சை குழுவினர் சிகிச்சை மீது மட்டும் கவனம் செலுத்துவதில்லை; தங்களது இளம் நோயாளிகளுக்கு வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவதையும் இலக்காக கொண்டு செயல்படுகின்றனர்.