செய்திகள் :

``இனிமே இங்க வந்தா கொன்னுடுவோம்" - ஆம்புலன்ஸ் டிரைவரின் புகார் - FIR சொல்வது என்ன?

post image

தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.

அதில் மிகவும் முக்கியமானது ஆம்புலன்ஸை வழிமறித்து தவெக தொண்டர்கள் டிரைவர்களைத் தாக்கியதாக எழுந்தக் குற்றச்சாட்டு.

TVK Vijay Karur Stampede
TVK Vijay Karur Stampede

இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஈஸ்வர மூர்த்தி அளித்தப் புகாரின் எஃப்.ஐ.ஆர் வெளியாகியிருக்கிறது.

அதில், `` நான் கரூர் அமராவதி மருத்துவமனை வெளியே உள்ள சாய் ஆம்புலன்ஸில் டிரைவராக வேலை வருகிறேன். 27.09.2025-ம் தேதி இரவு 07.15 மணிக்கு, அமராவதி மருத்துவமனையில் இருந்த ஒரு காவலர் வந்து `வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க கட்சியினர் நடத்திய பிரச்சாரத்தால் கூட்ட நெரிசலில் அதிகமாகி மயக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறும் சொன்னார்.

நான் ஆம்புலன்ஸ் வாகனத்தை எடுத்துக் கொண்டு, வேலுச்சாமிபுரம் சென்றேன். அங்கு மயங்கி கிடந்த ஒரு பெண் இரண்டு ஆண்களை ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

அங்கிருந்த மருத்துவர் இரண்டு ஆண்களையும் பரிசோதித்துவிட்டு, அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னதன் பேரில், கரூர் மெடிக்கல் காலேஜிற்கு சென்று இறந்தவர்களை மருத்துவரிடம் ஒப்படைத்தேன்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

தொடர்ந்து நான் மறுபடியும் ஆம்புலன்ஸில் வேலுச்சாமிபுரம் மருத்துவமனை அருகில் 08.15 மணி சுமாருக்கு வந்த போது TN 54AB 5335 என்ற எண் கொண்ட ALCAZAR கலர் காரில் வந்த நபர்கள், என் ஆம்புலன்ஸை வழிமறித்து, கெட்ட வார்த்தையால் திட்டி, கைகளால் தாக்கினார்கள்.

'நான் அவசரமாகச் செல்ல வேண்டும். உயிரை காப்பாற்ற வந்தேன்' என்று சொல்லிக் கொண்டே ஆம்புலன்ஸை எடுத்த போது, அனைவரும் ஆம்புலன்ஸை எடுக்க விடாமல் அங்கு கிடந்த கல்லால் ஆம்புலன்ஸின் சைடு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியும், சைரன் லைட்டை சேதப்படுத்தினார்கள்.

'இனிமேல் உன் வண்டி இங்கே வத்தால், நாங்கள் அனைவரும் சேர்ந்து உன்னை கொல்லாமல் விடமாட்டோம்' என்று மிரட்டினார்கள்.

நான் உயிருக்கு பயந்து கொண்டு வண்டியை திரும்ப மருத்துவமனையில் நிறுத்திவிட்டு, என் ஓனருக்கு தகவல் கூறினேன். என் மீது கொலை மிரட்டல் விடுத்தவர்கள், கடமையைச் செய்யமுடியாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் புகாரின் பேரில் கரூர் நகர காவல் நிலையம், 856/2025 U/S 191(2), 29(b) 115(2) 324(3), 351(3), BNS ன்படி வழக்கு பதிவு செய்திருக்கிறது.

கோத்தகிரி: தலையில் காயம்,தேயிலைத் தோட்டத்தில் மர்மாக கிடந்த வடமாநில பெண்ணின் சடலம்; விசாரணை தீவிரம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான வடமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலை தோட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான வடமாநில தொழில... மேலும் பார்க்க

சிக்கன் கேட்டதால் அடி; 7 வயது மகன் உயிரிழப்பு - தாய் கைது

மும்பை அருகில் உள்ள பால்கர் காசிபாடாவில் வசிப்பவர் பல்லவி. இவருக்கு 7 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரது 7 வயது மகன் வீட்டில் சிக்கன் குழம்பு வைக்... மேலும் பார்க்க

சென்னை: காதல் ஜோடியை மிரட்டிய கும்பல் - ஆன்லைன் மூலம் பணத்தை பறித்ததால் சிக்கிய பின்னணி!

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், படப்பையை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று மணிமங்கலம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து ப... மேலும் பார்க்க

`காதலிக்க மறுத்த ராணுவ வீரரின் காதலி மீது ஆசிட் வீச்சு' - சோசியல் மீடியா காதலனை ஏவிய பெண்

ஆசிட் வீசிய பெண்உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் இருக்கும் திக்ரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுகுனா(22) என்ற ஆசிரியை பள்ளிக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந... மேலும் பார்க்க

மதுரை: கழிவறை ஜன்னல் வழியாக பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது

கழிவறையில் மொபைல் போன் வைத்து சக பெண் ஊழியர்களை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆபாச வீடியோமதுரை மாவட்டத்திலுள்ள மின்வாரிய அ... மேலும் பார்க்க

மதுரை: போலீஸ் கஸ்டடியில் சிறுவன் மரணம்; இன்ஸ்பெக்டர், போலீஸாருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

விசாரணையில் உயிரிழந்த சிறுவன்மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரின் மகன் முத்து கார்த்திக் என்ற 17 வயதுச் சிறுவனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலை... மேலும் பார்க்க