வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு
selena gomez: காதலரைக் கரம்பிடித்த செலினா கோம்ஸ் - வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்!
ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் செலினா கோம்ஸ்.
நடிகை, பாப் பாடகி, தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகத் தன்மை கொண்ட இவர், 400 மில்லியன் பாலோயர்ஸைப் பெற்ற முதல் பெண் பிரபலம் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் 417 மில்லியன் பாலோயர்ஸைக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அமெரிக்காவின் இளம் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் காதலர் பென்னி பிளாங்கோவை கரம் பிடித்திருக்கிறார். கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. செலினா கோம்ஸும், பென்னி பிளாங்கோவும் 'same old love', 'i can't get enough', 'single soon' போன்ற ஆல்பங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.