TVK Vijay rally stampede : காயமடைந்தவர்கள் Exclusive பேட்டி | Ground report
Kantara: நாளை நடைபெறவிருந்த `காந்தாரா' படத்தின் சென்னை நிகழ்வு ஒத்திவைப்பு! - காரணம் இதுதான்!
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் வருகிற அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வருகிறது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்திருந்த காந்தாரா' படத்தின் ப்ரீக்வல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கரூரில் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, நாளை சென்னையில் நடைபெறவிருந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வையும் ஒத்திவைத்திருக்கிறார்கள்.
அது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ஹோம்பாலே பிலிம்ஸ், ``சமீபத்திய துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, நாளை சென்னையில் திட்டமிடப்பட்டிருந்த காந்தாரா சாப்டர் 1 விளம்பர நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்.
இது பாதிக்கப்பட்டவர்களுடன் உடன் நிற்க வேண்டிய நேரம் என்று நாங்கள் நம்புகிறோம்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.
உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி, மேலும் தமிழ்நாட்டில் உள்ள எங்கள் பார்வையாளர்களை மிகவும் பொருத்தமான நேரத்தில் சந்திக்க எதிர்பார்க்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.