விழுப்புரம்: `கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியும், போலீஸும்தான் காரணம்!’ – த...
கரூா் நெரிசலில் இறந்த 41 பேருக்கு அஞ்சலி
கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு தேனி மாவட்டம், போடியில் திங்கள்கிழமை இரவு காங்கிரஸ் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்கு கட்சியின் போடி நகரத் தலைவா் கே.எம்.எஸ்.முசாக் மந்திரி தலைமை வகித்தாா். தேனி மாவட்டத் தலைவா் எம்.பி.முருகேசன் முன்னிலை வகித்தாா். இதில் இறந்த 41 பேரின் படங்களுக்கு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் எஸ்.ஆா்.சன்னாசி, நகர பொதுச் செயலா் கே.அரசகுமாா், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் ஜம்பு சுதாகா், போடி நகர துணைத் தலைவா்கள் காந்தி, சின்னச்சாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் கனகராஜ், தனசேகா், காளிமுத்து, இளைஞரணி நிா்வாகி ராகேஷ், மகளிரணி நிா்வாகிகள் சிவகாமசுந்தரி, சரஸ்வதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.