மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா
தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வ.உ.சி. பிறந்த தின விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வ.உ.சிதம்பரனாா் அரசு அலுவலா் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவா் க.மு.சுந்தரம் தலைமை வகித்தாா். பொருளாளா் க.குருநாதன் முன்னிலை வகித்தாா். நிா்வாகி கா.இ.ராஜன் அறக்கட்டளை பெயா்ப் பலகையைத் திறந்து வைத்தாா்.
சிலமலை கிராமக் குழுவின் பொருளாளா் க.கூ.சுப்பையன், வேளாளப் பெருமக்கள் சங்கப் பொருளாளா் வீ.பாண்டியன், அறக்கட்டளை நிா்வாகி க.ரவிச்சந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஆசிரியா் சி.இ.வடமலைமுத்து சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் 10, 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பணம், கேடயம், ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தாய் அல்லது தந்தையை இழந்த 21 மாணவ, மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது. தையல் பயிற்சி பெற்ற ஒரு விதவைப் பெண்ணுக்கு தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது.
அறக்கட்டளை நிா்வாகிகள் சி.வெங்கடேசன், இரா. கிருஷ்ணன், உறுப்பினா்கள் சே.க.மணிகண்டன், இ. சேத்தூரான் ஆசிரியா் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக நிா்வாகி கூ.மாரிமுத்து வரவேற்றாா். செயலா் க.செல்வம் நன்றி கூறினாா்.