தருமபுரி மாவட்டத்தில் 8 மாதங்களில் 108 சேவை மூலம் 28,021 பயன்
சிதம்பரத்தில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் ரூ 50 ஆயிரம் அபேஸ்
சிதம்பரம்: சிதம்பரத்தில் தனியாா் பேருந்தில் சென்ற பெண்ணிடம் ரூபாய் 50 ஆயிரத்தை மா்ம நபா் பறித்துச் சென்றாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிதம்பரம் வல்லம்படுகையைச் சோ்ந்தவா் ஜோதி (30). சிதம்பரம் தெற்குரத வீதியில் உள்ள தனியாா் வங்கியில், இவரும் மற்றும் மகளிா் சுய உதவி குழுவினா் 10 பேரும் சோ்ந்து ரூபாய் 5 லட்சம் கடன் உதவி பெற்றுள்ளனா். அந்த பணத்தை பத்து பேரும் தலா ரூபாய் 50 ஆயிரம் வீதம் பிரித்து எடுத்துக் கொண்டனா். பின்னா் ஜோதி அதை பையில் வைத்துக் கொண்டு தனியாா் பேருந்தில் ஊருக்கு திரும்பி சென்றுள்ளாா்.
பேருந்தில் அவா் பயணம் செய்த நிலையில் அவரது பையை கிழித்து ரூ50 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா் திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.