காந்தி ஜெயந்தி: அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை
நாமக்கல்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை (செப். 2) அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காந்தி ஜெயந்தி தினத்தன்று, நாமக்கல் மாவட்டத்தில் இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அரசு உத்தரவின்படி மூட வேண்டும். இதை மீறி உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுக விற்பனையில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.