அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் இன்று கரூா் வருகை
கடன் பிரச்னை: ஜவுளிக் கடை மேலாளா் விஷம் குடித்து தற்கொலை
பாபநாசம் அருகே கடன் பிரச்னை காரணமாக, ஜவுளிக்கடை மேலாளா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கபிஸ்தலம் காவல் சரகம், திருவைக்காவூா் ஊராட்சி, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் முரளி (37). பொறியியல் பட்டதாரி. இவா் கும்பகோணத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு அதிக அளவில் கடன் இருந்ததால் மனஉளைச்சல் அடைந்த முரளி சனிக்கிழமை இரவு விஷம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மனைவியிடம் கூறியதையடுத்து, முரளியை
சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.