மின் கம்பியாள் உதவியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
மின் கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வில் பங்கேற்க தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளா்களிடமிருந்தும், இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவா்களிடமிருந்தும், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாள் தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரா் மின் வயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இத்தோ்வுக்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டை ட்ற்ற்ல்ள்://ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரரே துணை இயக்குநா் மற்றும் முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், தஞ்சாவூா் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்ப வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத் துணை இயக்குநா் மற்றும் முதல்வருக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபா் 17 ஆம் தேதி.