செய்திகள் :

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

post image

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி என தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைப் பதிவு ஒன்றை பதிவிட்டு சில நிமிடங்களிலேயே நீக்கியுள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய ஒன்றுமரியா அப்பாவி குழந்தைகள் 9 பேர் உள்பட 41 பேர் பலியாகினர்.

இந்தச் சம்பவத்தில் தவறான திட்டமிடல் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தவெக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தது உள்ளிட்டக் காரணங்களாலும் கூட்ட நெரிசல் பலி ஏற்பட்டதாக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தவெக பிரசாரக் கூட்டத்தில் பலியானவர்கள் குறித்து தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்பக்கூடாது என முதல்வர் ஸ்டாலினும் எச்சரித்திருந்தார்.

இதற்கு மத்தியில் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைப் பதிவு ஒன்றை வெளியிட்டு கடும் எதிர்ப்புகள் வெளியான நிலையில் சில நிமிடங்களிலேயே அதனை நீக்கியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தப் பதிவில்,

சாலையில் நடந்து சென்றாலே தடியடி...

சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது....

இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.

இளைஞர்களும், ஜெஸ் ஸீ(genz) தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.

அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!” எனப் பதிவிட்டிருந்தார்.

இளைஞர்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டும் வகையில் இரவு 11.29 மணிக்கு ‘இலங்கை, நேபாளம் போல இளைஞர் புரட்சி எழுச்சிக்கான அறைகூவல்’ எனப் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா, பின்னர் 12 மணிக்கு இலங்கை, நேபாளம் போன்ற சொற்களை நீக்கிவிட்டு பதிவிட்டுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் ஏற்பட்டு எதிர்ப்புகளைத் தொடர்ந்து பதிவை நீக்கியுள்ளார்.

Revolution is the only way! - Post deleted by Adhav Arjuna!

இதையும் படிக்க... கூட்டத்தை அதிகரிக்க விஜய் தாமதமாக வந்ததால் நெரிசல்: முதல் தகவல் அறிக்கை

தங்கம் விலை மேலும் உயர்ந்தது! இன்று எவ்வளவு?

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,140 உயர்ந்துள்ளது.இந்நிலையில் இன்ற... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் சம்பவம்: வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது!

கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பிய பிரபல யூடியூபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள காலை... மேலும் பார்க்க

கரூர் மாவட்டச் செயலாளரிடம் 10 மணி நேரமாக விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் 10 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செ... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் பலி சம்பவம்: மற்றொரு தவெக நிர்வாகி கைது!

கரூர் நெரிசல் பலி சம்பவத்தில் மற்றொரு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு இன்று(செப்.30) காலை 6723 கன அடியிலிருந்து வினாடிக்கு 6111 கன அடியாக குறைந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வின... மேலும் பார்க்க

ஆயுதபூஜை: கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு திருவனந்தபுரம், மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுதபூஜை... மேலும் பார்க்க