பிரசார கூட்டத்தில் மின்சாரத்தை துண்டித்தது யார்? திமுக மீது வீண் பழி சுமத்துகிறத...
கரூர் மாவட்டச் செயலாளரிடம் 10 மணி நேரமாக விசாரணை!
கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் 10 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் நேற்று இரவு காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இரவு முழுவதும் விடிய விடிய சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.