செய்திகள் :

பிரசார கூட்டத்தில் மின்சாரத்தை துண்டித்தது யார்? திமுக மீது வீண் பழி சுமத்துகிறதா தவெக?

post image

கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தின்போது மின்சாரத்தை துண்டிக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுமதி கோரி மாவட்டச் செயலாளர் வழங்கிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி இரவு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நேரிட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் சமூக வலைதளங்களில் திமுகவினர் குறித்து அவதூறு பரப்பும் வகையில், விஜய் பேசும்போது மின்சாரம் தடைபட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் விஜய் பேசும்போது சுமார் 10,000 பேர் வரை கூடுவார்கள். இதனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விஜய் பேசும் போது மின்சாரம் தடை செய்ய வேண்டும் என தவெக மாவட்டச் செயலர் மதியழகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கூறி வழங்கிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகிற 27 ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் காலை 12 மணிக்கு மேல் உறையற்ற உள்ளார். மேற்படி நிகழ்ச்சி உரிய காவல் துறை அனுமதியுடன் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வேலுச்சாமிபுரம் நெரிசலான பகுதி என்பதாலும் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தலைவர் விஜய் பேசும் குறிப்பிட்ட நேரம் மட்டும் மின்சாரத்தை நிறுத்தம் செய்து தருமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், விஜய் வேலுசாமிபுரத்திற்கு வருவதற்கு இரவு 7 மணி ஆனது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. மேலும், விஜய்யின் பிரசார வாகனத்தில் கட்டப்பட்டிருந்த மின் விளக்குகள் ஜெனரேட்டர்கள் கொண்டு பொருத்தப்பட்டிருந்தன.

விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது மின்வெட்டு எதுவும் செய்யப்படவில்லை. அந்தக் கட்சியினர் ஜெனரேட்டர் தடுப்புகளை உடைத்துக்கொண்டு செல்லும்போது, மின்சாரம் தடைபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே போதிய வெளிச்சம் இல்லாததால் மக்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி விழுந்து மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி கூறுகையில், “தமிழ்நாடு மின்சார வாரியத்திடம், மின்சாரத்தை நிறுத்தக்கோரி தவெகவினர் கடிதம் சமர்ப்பித்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும்” திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிரசாரக் கூட்டத்துக்குச் சென்ற ஒருவர் கூறுகையில், இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை மின்சாரம் தடைபட்டதாகவும், அந்த நேரத்திலேயே கடும் நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால், தவெக கூட்டத்தில் பிரச்சினையை ஏற்படுத்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் இதுபோன்ற சதிச் செயலில் ஈடுபட்டதாக தவெகவினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? அல்லது ஜெனரேட்டர் பிரச்சினையா? என்பது குறித்த விரிவான தகவல்கள் உரிய விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vijay's TVK sought brief power cut, letter shows amid rally stampede blame game

இதையும் படிக்க... பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

கரூர் சென்ற பாஜக எம்பிக்கள் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

கோவையில் இருந்து கரூர் சென்றுகொண்டிருந்த பாஜக எம்பிக்களின் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் கார்கள் லேசான சேதமடைந்த நிலையில், எம்பிக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்! முன் ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்!

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில், முன் ஜாமீன் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கரூர் வேல... மேலும் பார்க்க

ஆறுதல்கூட சொல்லாமல் ஒரு தலைவர் சென்றது இதுவரை பார்த்திராத ஒன்று: கனிமொழி கடும் விமர்சனம்

தவெக தலைவர், நிர்வாகிகளுக்கு மனிதாபிமானம் இல்லை என்றுதான் தோன்றுகிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "இறந்துபோன குழந்தைகள், இளைஞர்களின... மேலும் பார்க்க

தவெக நிர்வாகிகள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கரூர் தமிழக வெற்றிக் கழகக் கூட்ட நெரிசலில் பலியான சம்பவத்தில் கைதான மாவட்ட செயலர் மதியழகன், மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் இருவரும் கரூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.கரூரில் சனிக... மேலும் பார்க்க

கரூர் பலி: வதந்தி பரப்பிய மூவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை! - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனியார் பள்ள... மேலும் பார்க்க