செய்திகள் :

புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கும் சூர்யா?

post image

நடிகர் சூர்யா புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. தற்போது, இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் தன் 46-வது படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா ’ழகரம் ஸ்டூடியோஸ்’ என்கிற பெயரில் புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படமாக ஜித்து மாதவனின் படமும், இரண்டாவது படமாக இயக்குநர் பா. இரஞ்சித்தின் படமும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, சூர்யா 2டி எண்டர்டெயின்மெண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், ஸ்டூடியோ கீரின் போன்ற தன் உறவினர்களின் தயாரிப்பு நிறுவங்களின் மட்டுமே நடித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நடிகர் மோகன் லாலுக்கு பிரமாண்ட பாராட்டு விழா! கேரள அரசு அறிவிப்பு!

reports suggests actor surya will starts new film production company named as zhagaram.

கைதி - 2 நிலைமை என்ன?

கார்த்தி நடிக்கவுள்ள கைதி - 2 திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இப்படத்திற்குப் பின்பே ... மேலும் பார்க்க

கைவிடப்படும் வாடிவாசல்?

வாடிவாசல் திரைப்படம் கைவிடப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது. மறைந்த எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்... மேலும் பார்க்க

இட்லி கடை மேக்கிங் விடியோ!

நடிகர் தனுஷின் இட்லி கடை மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான இட்லி கடை நாளை (அக். 1) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அருண் விஜய், நித்யா மெனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர... மேலும் பார்க்க

நடிகர் மோகன் லாலுக்கு பிரமாண்ட பாராட்டு விழா! கேரள அரசு அறிவிப்பு!

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மலையாள நடிகர் மோகன் லாலுக்கு, வரும் அக்டோபர் 4 ஆம் தேதி பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. 71 ஆவது தேசிய விருது விழாவில், மலையாள நடிகர் மோ... மேலும் பார்க்க

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவிகித வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் கூறியதாவது,``ஒரு குழந்தையிடமிருந்து மி... மேலும் பார்க்க