விளம்பரம் இல்லாமல் யூடியூப் பார்க்கலாம்... யூடியூப் பிரீமியம் லைட் இந்தியாவில் அ...
பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா
தற்போது எதையும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவின் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கரூர் விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் 41 பேர் பலியான பிறகு, கடந்த மூன்று நாள்களாக தவெகவின் மூத்த நிர்வாகிகள் யாரும் செய்தியாளர்களை சந்திக்காமல் உள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் வீட்டைவிட்டு வெளியேறிய ஆதவ் அர்ஜுனாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியவுடன், தற்போது எதையும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை, புரிந்துகொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கபட்ட மக்களை விரைவில் சந்திப்போம் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி எனக் குறிப்பிட்டு, நேற்று நள்ளிரவு ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து, அதனை சற்றுநேரத்தில் நீக்கிவிட்டார்.
இதனிடையே, கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், முதல்கட்டமாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பொன்ராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Not in a situation to talk: TVK Adhav Arjuna
இதையும் படிக்க : பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!