கரூர் மரணங்கள்: TVK BJP DMK - ஆளுக்கொரு அரசியல் கணக்கு; மக்களை மறந்த கட்சிகள்| V...
விளம்பரம் இல்லாமல் யூடியூப் பார்க்கலாம்... யூடியூப் பிரீமியம் லைட் இந்தியாவில் அறிமுகம்!
யூடியூப் பிரீமியம் லைட் மூலம் யூடியூப் செயலியில் இனி விளம்பரம் இல்லாமல், விடியோக்களை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணம் ரூ.100க்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான பயனர்களைக் கவரும் வகையில், குறைந்த கட்டணத்தையே யூடியூப் நிர்ணயித்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூடியூப் செயலியை இந்தியாவில் 49 கோடி பயனர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 25 கோடி பயனர்கள் உள்ளனர்.
யூடியூபில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது விளம்பர இடையூறு இல்லாமல் விடியோக்களை பார்க்கும் வகையில் யூடியூப் பிரீமியம் லைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் பெற்றுப் பயன்பெறலாம். இதற்கான கட்டணம் ரூ. 89 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான பயனர்களைக் கவரும் வகையில், குறைந்த சந்தா தொகையை நிர்ணயித்துள்ளது. இதனைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு விடியோவின்போது விளம்பரங்கள் தோன்றாது.
மாறாக குறு விடியோக்கள் (ஷாட்ஸ்), மியூசிக் தேர்வு செய்யும்போது மட்டும் தொடக்கத்தில் விளம்பரம் தோன்றும் என யூடியூப் தெரிவித்துள்ளது.
யூடியூப் பிரீமியம் லைட் திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து இதனை நீண்டகால பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் யூடியூப் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க | ஐபோனுக்கு போட்டியாக ஒன்பிளஸ் 15..! விலை, வெளியீடு, சிறப்பம்சங்கள் என்ன?