செய்திகள் :

அதானியின் Clean Chit முதல் நீட்டிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கல் வரை; செப்டம்பர் ரீவைண்ட்!

post image

இந்த செப்டம்பர் மாதம் நிதி மற்றும் பொருளாதாரம் சம்பந்தமாக இந்தியா மற்றும் உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்ப்போம்.

செப்டம்பர் 3 - ஜி.எஸ்.டி 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, இதுவரை இருந்த 5%, 12%, 18% மற்றும் 28% என்று நான்கு வரி வகைகள் இருந்தன. தற்போது இது 5 சதவிதம், 18 சதவிகிதம் என இரண்டு வரி வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இது அமலானது செப்டம்பர் 22-ம் தேதி ஆகும்.

செப்டம்பர் 5 - கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியாவைத் தொடர்ந்து விமர்சித்த வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'பிரதமர் மோடியை நண்பர்' என்று குறிப்பிட்டிருந்தார். இதை பிரதமர் மோடியும் வழிமொழித்திருந்தார்.

GST 2.0
GST 2.0

செப்டம்பர் 15 - வழக்கமாக, ஜூலை 31-ம் தேதியே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதியாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வருமான வரித் தாக்கல் வலைத்தளத்தில் மேற்கொண்ட சில அப்டேட்டுகளால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் கடைசித் தேதி செப்டம்பர் 15-ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், செப்டம்பர் 15-ம் தேதி, வருமான வரிக் கணக்குத் தாக்கல் வலைத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், கடைசித் தேதி ஒரே ஒரு நாளுக்கு அதாவது செப்டம்பர் 16 வரை நீட்டிக்கப்பட்டது.

செப்டம்பர் 17 - அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்தது.

செப்டம்பர் 18 - அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் அறிக்கை கூறியது போல, அதானி குழுமத்தின் மீது எந்த தவறும் கிடையாது என்று செபி அறிக்கை வெளியிட்டிருந்தது.

செப்டம்பர் 19 - ட்ரம்ப் 'கோல்டு கார்டு' அறிமுகம் செய்தார். இந்தக் கார்டிற்குத் தனிநபருக்கு 1 மில்லியன் டாலர் என விலை நிர்ணயிக்கப்பட்டது.

H-1B விசா - ட்ரம்ப் | இந்தியா, சீனா
H-1B விசா - ட்ரம்ப்

அதே நாளில், ஹெச் 1-பி விசா விலையை 1 லட்சம் டாலராக (ரூ.88 லட்சம்) ட்ரம்ப் அரசு அதிகரித்தது. இது புதிதாக இந்த விசாவை விண்ணப்பிப்பவர்களுக்கு விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த விசாவை இதுவரை 66 சதவிகித இந்தியர்கள்தான் பெற்று வந்ததால், இது இந்தியாவில் கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

செப்டம்பர் 22 - ஜி.எஸ்.டி 2.0 அமலுக்கு வந்தது. குறைக்கப்பட்ட விவரங்கள் இதோ.

செப்டம்பர் 22 - அமெரிக்காவில் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மார்கோ ரூபியோ சந்தித்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். இருவரும் வர்த்தகம், எரிசக்தி, மருத்துவம், முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட இருதரப்பு உறவின் முக்கியமான விஷயங்களைப் பற்றிக் கலந்துரையாடி இருக்கின்றனர்.

இந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரை, 'இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும். இந்தியாவிற்கு இந்தியத் தேசம் மற்றும் மக்களின் நலன்தான் முக்கியம். இதில் பிற நாட்டின் தலையீட்டை இந்தியா அனுமதிக்காது' என்பதை அமெரிக்காவிற்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் பதில் கொடுத்தனர்.

அமெரிக்கா - இந்தியா இடையே நடக்கும் வர்த்தக பேச்சுவார்த்தை பாசிட்டிவாக உள்ளது. வரும் நவம்பர் மாதம் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தகவல். இந்த மாதம் இந்தப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவிலிருந்தும் அதிகாரிகள் இந்தியா வந்திருந்தனர். பியூஷ் கோயல் தலைமையில் அதிகாரிகள் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றிருந்தனர்.

கரூர் மரணங்கள்: "பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது" - விஜய் குறித்து ஆளூர் ஷாநவாஸ்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.இன்று இதுகுறித்து வீடியோ வெளியிட்ட விஜய், "கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்குப் பிரசாரத்துக்குப் போனோம். அங்கெல்ல... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" - CPI(M) கண்டனம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் விஜய் இன்று (செப் 30) மா... மேலும் பார்க்க

விஜய் வீடியோவும் சில கேள்விகளும்: "உங்களின் கிரீடத்தை முதலில் கழற்றி வையுங்கள் விஜய்!"

கரூர் பெருந்துயர் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவரைக் காண வந்து உயிரைப் பறிகொடுத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார். அதில், 'இரண்டு வா... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் கூட நெரிசலில் சிக்கு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ஏ.டி.ஜி.பி டேவிட்சன், மருத்துவத்துற... மேலும் பார்க்க

"கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு" -எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 42 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தத் துயர சம்பவம்... மேலும் பார்க்க