செய்திகள் :

கரூர் மரணங்கள்: "பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது" - விஜய் குறித்து ஆளூர் ஷாநவாஸ்

post image

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

இன்று இதுகுறித்து வீடியோ வெளியிட்ட விஜய், "கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்குப் பிரசாரத்துக்குப் போனோம். அங்கெல்லாம் எதுவும் நடக்கல. ஆனால், கரூர் மாவட்டத்துல மட்டும் ஏன் இப்படி நடந்துச்சு?

CM சார் உங்களுக்கு எதாவது பழி வாங்கணும்னு எண்ணம் இருந்தா, என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க, எங்க கட்சித் தோழர்கள் மேல கை வைக்காதீங்க" என்று பேசியிருக்கிறார்.

கரூர் விஜய் பிரசாரம்
கரூர் விஜய் பிரசாரம்

இந்நிலையில் விஜய்யின் நாகை பிரசாரத்தின்போது, "விஜய்க்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்க துணிச்சல் இல்லை" என்று விமர்சித்திருந்தார் விசிக நாகை எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்.

தற்போது இந்த கரூர் கூட்ட நெரிசல் குறித்தும், விஜய் வெளியிட்ட வீடியோ குறித்து, "விஜய்யிடம் அரசியல் கூர்மை இல்லை என்றுதான் நினைத்தோம். அவர் வெளிவர வெளிவரத் தான், துளி கூட அவரிடம் அரசியல் நேர்மை இல்லை என்பது அம்பலமாகிறது.

திட்டமிட்ட நாளில் வராமல் திடீரென கரூர் வந்தது, குறித்த நேரத்தில் வராமல் மிகமிக தாமதித்தது, குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக கூட்டத்தை வரவைத்தது, கூடிய மக்களுக்கு குடிக்க தண்ணீர் ஏற்பாடு கூட செய்யாதது, நீதிமன்றம் சொல்லியும் கேட்காமல் குழந்தைகள் பெண்களைத் திரட்டியது, போலீஸ் எச்சரித்தும் கேட்காமல் கூட்டத்தில் புகுந்தது,

ஜெனரேட்டர் பகுதியைச் சூறையாடியது, ஆம்புலன்ஸ் டிரைவரைத் தாக்கியது, பிரச்னை என்ற உடன் ஓடி ஒளிந்தது, மக்களைச் சந்திக்காமல் கட்சி கட்டமைப்பே கள்ள மெளனம் காத்தது என்று ஓராயிரம் பிழைகள் செய்தும், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காதது மட்டுமல்ல, முதலமைச்சருக்குச் சவால் விட்டு சண்டைக்கும் இழுக்கிறார் விஜய். மூன்று நாட்களாக முக்கி முக்கி விஜய்க்கு முட்டுக் கொடுத்தவர்கள் கூட, வெட்கித் தலைகுனியும் அளவுக்கு விஜய்யின் ஒற்றை வீடியோ அமைந்துவிட்டது" என்று கூறியிருக்கிறார்.

மேலும், "பொய் சொல்வதில், புரட்டு பேசுவதில், வன்மத்தை உமிழ்வதில், போகிற போக்கில் அடித்து விடுவதில், எதற்கும் பொறுப்பேற்காமல் கல் மனதுடன் வெளிப்படுவதில், அண்ணாமலையையும் R.N.ரவியையும் பின்பற்றுகிறார் விஜய் என்று அன்றே சொன்னேன்.

அதை நாளும் நிரூபிக்கிறார் விஜய். விஜய், பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது. பிரச்னை என்ற உடன் வழக்கமாக மன்னிப்பு கேட்டு எஸ்கேப் ஆவார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். விஜய் அதில் மட்டும் மாறுபட்டு மன்னிப்பு கேட்காமல் எஸ்கேப் ஆகிறார்" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

கரூர் மரணங்கள்: "விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" - CPI(M) கண்டனம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் விஜய் இன்று (செப் 30) மா... மேலும் பார்க்க

விஜய் வீடியோவும் சில கேள்விகளும்: "உங்களின் கிரீடத்தை முதலில் கழற்றி வையுங்கள் விஜய்!"

கரூர் பெருந்துயர் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவரைக் காண வந்து உயிரைப் பறிகொடுத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார். அதில், 'இரண்டு வா... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் கூட நெரிசலில் சிக்கு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ஏ.டி.ஜி.பி டேவிட்சன், மருத்துவத்துற... மேலும் பார்க்க

"கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு" -எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 42 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தத் துயர சம்பவம்... மேலும் பார்க்க

ஆதவ் அர்ஜுனா: "விரைவில் அவர்களைச் சந்திப்போம்" - செய்தியார்களிடம் ஆதவ் பேசியதென்ன?

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக... மேலும் பார்க்க