இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
நான்குனேரி ரயில் நிலையம் செல்லும் பாதையில் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை
நான்குனேரி ரயில் நிலையம் செல்லும் வழியில் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ரயில் நிலையத்தை நான்குனேரி வட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், பேருந்து நிலையத்திலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவுள்ள ரயில் நிலையத்துக்குச் செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் சில தினங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளன.
இதனால், இருள் சூழ்ந்துள்ள அப்பகுதியைக் கடக்க மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனா். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.