காந்தி ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை
அக்.2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு , கடலூா் மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகளும் மதுபான விற்பனை மேற்கொள்ளக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி வியாழக்கிழமை கடலூா் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்று இயங்கும் மனமகிழ் மன்றங்கள் , மதுபானக் கூடங்களை மூடவும்,
மதுபானம் விற்பனை மேற்கொள்ள கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. அரசு உத்தரவை மீறி மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் எச்சரித்துள்ளாா்.