செய்திகள் :

நின்று நிதானித்து கார்/பைக் வாங்குங்கள்!

post image

ஜிஎஸ்டி விலைக் குறைப்பால்... கார் பைக்குகளின் விலை மகிழ்ச்சி அளிக்கும் அளவிற்குக் குறைந்திருக்கின்றன. மின்சாரக் கார்களின் வரியில் மாற்றம் இல்லை என்றாலும்... உதிரிபாகங்களின் விலை குறைந்திருப்பதால், இவற்றுக்கும் சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. பண்டிகைக் காலம் துவங்கிவிட்டதால்... கார்/பைக்குகள் தாண்டி ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் பல பொருட்களின் விலைகளும் குறைந்திருக்கின்றன. இன்னொருபுறம் பண்டிகைக் கால போனஸும் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் மக்களின் கைகளில் உபரியாகப் பணம் மிஞ்சப்போகிறது. இதெல்லாம் மக்களை கார் மற்றும் பைக் ஷோரும்களை நோக்கி நகர்த்துவதைப் பார்க்க முடிகிறது. புதிய ஜிஎஸ்டி வரிவிகிதம் அமலுக்கு வந்த செப்டம்பர் 22-ம் தேதி கார் மற்றும் பைக் ஷோரூம்களில் திருவிழாக் கணக்காக மக்கள் குவிந்தார்கள். இந்த வரிக் குறைப்பால என்னென்ன கார்களின்/பைக்குகளில் விலை எவ்வளவு குறைந்திருக்கிறது என்று விரிவாக இந்த இதழில் அலசியிருக்கிறோம்.

இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க மேலும் பல புதிய மாடல் கார்களும், பைக்குகளும் ஸ்கூட்டர்களும் அறிமுகமாகி வருகின்றன. ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் பல கார்களும் ஃபேஸ்லிஃப்ட்டாக மறு அறிமுகமாகின்றன. இன்னொருபுறம் மாருதி சூஸூகியின் டிசையரும், விக்டோரிஸும் பாதுகாப்புக்காக வழங்கப்படும் GNCAP மற்றும் BNCAP-ல் ஐந்து நட்சத்திரங்கள் வாங்கி இருக்கின்றன.

ஆக, பக்கத்து வீட்டுக்காரர் வைத்திருக்கிறார்; எதிர் வீட்டுக்காரர் வைத்திருக்கிறார் என்று அவசரப்பட்டு காரை வாங்காமல், நின்று நிதானித்து நமக்கு என்ன மாதிரி கார் தேவை; அதில் என்ன மாதிரி வசதிகள் இருக்க வேண்டும்; நம் பட்ஜெட்டில் எந்தக் கார்கள் வரும்... என்பதை அலசி ஆராய்ந்து நிதானமாக கார்/பைக்/ஸ்கூட்டர் வாங்க கார் மேளாவும், பைக் பஜாரும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

- ஆசிரியர்

இந்திய ராணுவம்: 1960 முதல் போர்களில் பங்கேற்ற MiG-21 விமானத்துக்கு ஓய்வு - இனி என்ன ஆகும்?

இந்திய ராணுவத்துக்கு 1960 முதல் சேவையாற்றிவந்த MiG-21 ரக ஜெட் விமானங்கள் ஓய்வு பெற்றுவிட்டன. இவை 1965 இந்தியா–பாகிஸ்தான் போர், 1971 இந்தியா–பாகிஸ்தான் போர், 1999 கார்கில் போர்மற்றும் 2019 புல்வாமா தாக... மேலும் பார்க்க

GST 2.0: XUV கார் முதல் ஆக்டிவா ஸ்கூட்டர் வரை - என்ன என்ன வாகனங்களின் விலை குறைந்திருக்கிறது?

இன்று முதல் (செப்டம்பர் 22) ஜிஎஸ்டி 2.0 நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திருத்தப்பட்ட வரி புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு பலனளிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஆரம்பநிலை ஹேட்ச்பேக்ஸ் கார்களில் 40,00... மேலும் பார்க்க

Car sunroof: இவ்வளவு ஆபத்து இருக்கு பாஸ் சன்ரூஃபில்! - காருக்கு எதுக்குங்க சன்ரூஃப்?

சமீபத்தில் ஒரு வீடியோ சோஷியல் மீடியாக்களில் செய்தியாக வந்தது. பார்க்கவே கொஞ்சம் பதைபதைப்பாக, மனசுக்குப் பாரமாக இருந்தது. பெங்களூருவில் ஒரு மஹிந்திரா காரில், சன்ரூஃபில் ஏறி நின்று கொண்டு பயணித்த சி... மேலும் பார்க்க

EV Vehicles: அறிமுகமான TVS Orbiter Electric Scooter | Photo Album

EV: இது எந்த அளவுக்கு சிக்கனம்னு சொன்னா அப்படியே ஷாக் ஆய்டுவிங்க!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அர... மேலும் பார்க்க