செய்திகள் :

கரூர்: ``இறந்தவர்களுக்கு நியாயம்; இருப்பவர்களுக்கு நீதி'' - அருணா ஜெகதீசனுக்கு வைரமுத்து வேண்டுகோள்

post image

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி - அருணா ஜெகதீசன்
ஓய்வு பெற்ற நீதிபதி - அருணா ஜெகதீசன்

இந்நிலையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து அருணா ஜெகதீசனுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,

"கரூர் சம்பவம் குறித்து அரசு அமைத்திருக்கும் தனிநபர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

உயிரிழப்புக்கு ஆளான 41 குடும்பங்களிலும் நீங்கள் ஆய்வு மேற்கொண்டிருப்பீர்கள்.

அந்தக் குடும்பங்களில் வேலைவாய்ப்புக்கு வயதுடையவர்களையும் கல்வி கற்கும் வாய்ப்புடையவர்களையும் அரசுக்கு நீங்கள் அறிக்கையில் குறித்து அறிவிக்க வேண்டும்.

பலியானோர் பலரும் அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்கத்து நலிந்தவர்கள்தாம். வேலைவாய்ப்பும் கல்வியுமே அவர்களின் மாபெரும் துயரத்துக்கு மருந்தாக முடியும்.

கரூர் மருத்துவமனை
கரூர் மருத்துவமனை

இறந்தவர்களுக்கு நியாயம் செய்வதும் இருப்பவர்களுக்கு நீதி செய்வதுமே அறமாகும்.

இந்தப் பணியை நீங்கள் இப்போதே முடித்திருந்தால் அது சமூக தர்மமாகும். உங்கள் அறிக்கை பட்டழிந்தோர் கண்ணீரைத் தொட்டுத் துடைக்கும் சுட்டு விரலாகட்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

கரூர்: மருத்துவமனைக்குச் சென்றது முதல் மின்தடை வரை - விமர்சனங்கள் குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்தில் திமுகவிற்கும்,... மேலும் பார்க்க

கரூர்: "விஜய் மாலை 4 மணிக்கு வந்திருந்தால் கூட இந்தத் துயரைத் தடுத்திருக்கலாம்" - செந்தில் பாலாஜி

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்தில் திமுகவிற்கும்,... மேலும் பார்க்க

சென்னை: போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டில் போலீசார்; காரணம் என்ன?

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலர் காயமடைந்துள்ள நிலையில் பாத... மேலும் பார்க்க

TVK Karur Stampede: சனிக்கிழமை 'மரண ஓலம்' முதல் செவ்வாய்க்கிழமை Vijay Video வரை | Elangovan Explains

'கரூர் துயரச் சம்பவம்' இதில் இரண்டு நாட்களுக்குப் பிறகு வாய் திறந்துள்ளார் விஜய். அவர் வெளியிட்ட வீடியோவில், இரண்டு முக்கியமான மெசேஜ்கள். இறுதியில் மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். இதற்கு பதில... மேலும் பார்க்க

US: செனட்டில் நிறைவேற்றப்படாத மசோதா; முடங்கிய அமெரிக்கா- பாதிப்புகுள்ளான மக்கள்

அமெரிக்காவில் செலவினங்கள் குறித்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.அடுத்த நிதியாண்டிற்கான அமெரிக்க அரசின் செலவினங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த ம... மேலும் பார்க்க

காசா விவகாரம்: `இன்னும் 3 - 4 நாள்களில்' - மீண்டும் ஹமாஸை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடங்கிய போரில் இதுவரை காசாவில் 66,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிற... மேலும் பார்க்க