டி20-ல் புது வரலாறு..! தரவரிசையில் சாதனையுடன் முதலிடத்தில் அபிஷேக் சர்மா!
சத்தீஷ்கர்: கர்ப்பத்தைக் கலைக்க சொன்ன காதலன்; கழுத்தை அறுத்துக் கொன்ற காதலி; விசாரணையில் பகீர் தகவல்
சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகில் உள்ள கோனி என்ற கிராமத்தில் வசிக்கும் மைனர் பெண் ராய்ப்பூரில் வசிக்கும் மொகமத் சதாம் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார்.
இதில் மைனர் பெண் கர்ப்பமானார். பீகாரைச் சேர்ந்த மொகமத் சதாம் ராய்ப்பூரில் தங்கி வேலை செய்து வந்தார். மைனர் பெண் தனது காதலனைத் தேடி ராய்ப்பூருக்குச் சென்றார். அங்கு இருவரும் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துத் தங்கினர். அங்குத் தனது காதலியிடம் கர்ப்பத்தைக் கலைத்துவிடும்படி சதாம் கேட்டுக்கொண்டார். அவர்களுக்குள் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தில் சதாம் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கருவைக் கலைக்கும்படி மிரட்டினார்.

இரவில் சதாம் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது காதலி தன்னை சதாம் மிரட்டப் பயன்படுத்திய கத்தியை எடுத்து சதாம் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்த மொபைல் போனை எடுத்துக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். வீட்டிற்குச் சென்ற மைனர் பெண் தனது தாயாரிடம் சென்று நடந்த சம்பவத்தைக் கூறி அழுதார்.
இதையடுத்து அவரது தாயார் தனது மகளை அழைத்துச்சென்று உள்ளூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் உடனே சம்பவம் நடந்த லாட்ஜ் அறைக்குச் சென்று சதாம் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சதாம் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முயன்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
போலீஸாரின் விசாரணையில், மைனர் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே அப்பெண்ணிடம் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும், எனவே கர்ப்பத்தைக் கலைத்து விடும்படியும் சதாம் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் கத்தியைக் காட்டி மிரட்டி இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.
இதே ராய்ப்பூரில் வாணி என்ற 30 வயது காதலியை அவரது காதலன் லாட்ஜ் அறையில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலை செய்த காதலன் விஷால் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.