செய்திகள் :

ஏலகிரியில் குவியும் மக்கள்! மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

post image

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் ஆயுத பூஜை உள்பட 3 நாள்கள் விடுமுறை முன்னிட்டு புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து குடும்பத்தினருடன் மகிழ்ந்தனர்.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மா, பலா, வாழை விளையும் முக்கனிகளில் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது. இங்கு வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா்.

இங்குள்ள படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா, செயற்கை நீர்வீழ்ச்சி, முருகன் கோயில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவா்ந்து வருகின்றன. எனவே, விடுமுறை நாள்களில் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி, பொழுது போக்கி செல்கின்றனா்.

பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்தவாறு சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமை ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலையில் உள்ள படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குடும்பத்தினருடன் மற்றும் உறவினர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அனைத்து தங்கு விடுதிகளில் உள்ள அறைகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பலர் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் உள்ள தங்கு விடுதிகளில் முன்பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

People flocking to Yelagiri Traffic disruption on the mountain road

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை: ஆா்பிஐ அறிவிப்பு

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) புதன்கிழமை அறிவித்துள்ளது.இதனால், வீடு, வாகனம், தனிநபா் கடன... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை கண்டனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்த... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

மணிலா: சில நாட்களுக்கு முன்பு புயலால் பாதிக்கப்பட்ட மத்திய பிலிப்பின்ஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 6,111 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,358 கனஅடியாக சரிந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக... மேலும் பார்க்க

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

புது தில்லி: நாட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களில், தமிழ்நாடு 4-ஆவது இடத்தில் உள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இருசக்கர வாகன விபத்துகளால்... மேலும் பார்க்க

சொத்து வரியை செலுத்த இன்றே கடைசி!

சென்னை மாநகராட்சியில் நடப்பு அரையாண்டிற்கான சொத்து வரியை செலுத்த இன்று(செப். 30) கடைசி நாளாகும். சென்னை மாநகராட்சிப் பகுதியில் வசிப்போர் நடப்பு ஆண்டுக்கான இறுதி அரையாண்டு சொத்து வரியை இன்றைய நாளுக்குல... மேலும் பார்க்க