செய்திகள் :

Ajith: "எனக்கு தூக்கப் பிரச்னை இருக்கு; ஒரு நாளைக்கு 4 மணி நேரம்தான் தூங்குவேன்" - அஜித் குமார்

post image

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.

‛குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் ‛அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்றிருக்கிறது.

இந்நிலையில் செப்டம்பர் 28 ஆம் தேதி நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் இடம் பிடித்துச் சாதித்திருக்கிறது.

3-ம் இடம் பிடித்த அஜித் அணி
3-ம் இடம் பிடித்த அஜித் அணி

3ம் இடத்தைப் பிடித்த அஜித்குமார் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்குமார் 'India Today'-விற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவருக்கு இருக்கும் தூக்கப் பிரச்னை குறித்துப் பேசியிருக்கிறார்.

"சோசியல் மீடியாவைச் சரியாகப் பயன்படுத்தினால் அது ஒரு சிறந்த கருவியாக இருக்கும். நிறையப் பேர் சோசியல் மீடியா வழியாகத்தான் மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்த நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறார்கள்.

அதேபோல வெளிநாடுகளில் உள்ள மக்கள் இந்தியத் திரைப்படங்களையும், வெப் சீரிஸ்களையும் பார்க்கத் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அஜித் குமார்
அஜித் குமார்

என்னுடைய சில நண்பர்கள் கொரியன் டிராமாக்களைப் பார்த்து அந்த மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எனக்கு திரைப்படங்களையும் வெப் சீரிஸ்‌களையும் பார்க்க நேரம் எதுவும் கிடையாது.

விமானத்தில் பயணிக்கும்போது மட்டுமே எனக்கு தூங்க நேரம் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் எனக்கு தூக்கப் பிரச்னையும் இருக்கிறது.

எனக்கு தூங்குவதற்குச் சிரமமாக இருக்கும். அப்படியே தூங்கினாலும், அதிகபட்சம் 4 மணி நேரம்தான் தூங்குவேன்" என்று கூறியிருக்கிறார்.

இட்லி கடை விமர்சனம்: இயக்குநர் தனுஷ் சுட்டிருக்கும் ஃபீல் குட் இட்லி; நம் மனதுக்கு சுவை சேர்க்கிறதா?

தேனி மாவட்டம் சங்கராபுரத்தில் இட்லிக் கடை நடத்தி வருகிறார் சிவநேசன் (ராஜ் கிரண்). கையால் மாவு அரைத்து சிவநேசன் சுடும் இட்லிக்கு ஊரே அடிமை. இந்நிலையில், கேட்டரிங் படித்த அவரது மகன் முருகன் (தனுஷ்), அவர... மேலும் பார்க்க

GV Prakash: "இது லெஜண்ட் பயன்படுத்திய பியானோ" - தேசிய விருதுக்கு ரஹ்மான் அளித்த அன்புப்பரிசு!

71வது தேசிய விருதுகளில் சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருதை வென்றார் ஜி.வி. பிரகாஷ். இது அவர் வாங்கும் இரண்டாவது தேசிய விருதாகும். இந்தச் சாதனைக்கு ஜி.வி. பிரகாஷின் குருவும் மாமாவுமான முன்னணி இசையம... மேலும் பார்க்க

``சரியானவர்களை பின்பற்ற வேண்டும்; இல்லையென்றால் தவறாக வழிநடத்தப்படுவோம்'' - இயக்குநர் வெற்றிமாறன்

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன், "சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை இதையெல்லாம் நாம் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. அப்படிச் செ... மேலும் பார்க்க

What to watch - Theatre & OTT: இட்லி கடை, காந்தாரா, Sunny Sanskari; இந்த ஆயுத பூஜை ரிலீஸ்கள்

இட்லி கடை (தமிழ்)இட்லி கடை தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் இன்று (அக்டோபர் 1) திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்தி... மேலும் பார்க்க

புதிய ரேஸ் கார், புதிய ட்ராக்; ஆசிய லீ மான்ஸ் தொடரில் களமிறங்கும் அஜித்!

நடிகர் அஜித் குமார் தனது முழு கவனத்தையும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறா... மேலும் பார்க்க