ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு காவல் துறை சம்மன்!
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது வாகனத்தில் இருந்து பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் டிரோன் காட்சிகளை ஒப்படைக்க ஆதவ் அர்ஜுனாவுக்கும் நிர்மல் குமாருக்கும் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், விரிவான விசாரணைக்காக தவெகவினர் பதிவு செய்த விடியோவை காவல் துறையினர் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளனர்.