செய்திகள் :

புதிய ரேஸ் கார், புதிய ட்ராக்; ஆசிய லீ மான்ஸ் தொடரில் களமிறங்கும் அஜித்!

post image

நடிகர் அஜித் குமார் தனது முழு கவனத்தையும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறார்.

கடந்த ஜூன் மாதம் பெல்ஜியமில் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது.

சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா ரேஸ் டிராக்கில் நடைபெற்ற உலகளாவிய கார் பந்தயத்தில், அஜித் குமார் தலைமையிலான டீம் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

அஜித்தின் ரேஸிங் கார்

ஃபெராரி, லம்போகினி, போர்ஷே, பி.எம்.டபள்.யூ  ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டிப்பார்த்த அஜித், போர்ஷேவில் 911 GT3 RS எனும் ஸ்போர்ட்ஸ் காரை தேர்வு செய்து, கடந்த எல்லா ரேஸிலும் பயன்படுத்தி வந்தார்.

அடுத்ததாக ஆசிய லீ மான்ஸ் (Asian Le Mans Series)  தொடரில் களமிறங்க, இப்போது புதிய ரேஸ் கார் ஒன்றை தயார் செய்து வருகிறார் அஜித். இந்த லீ மான்ஸ் தொடர் கொஞ்சம் வேறுபட்டது. இதில்  LMP2, LMP3, GT3 வகை கார்கள்தான் பங்கேற்கின்றன.

இதற்காகத்தான் அஜித் இந்த LMP3 (Le Mans Prototype 3) காரை தயார் செய்து வருகிறார். இந்த வகை கார்கள் முழுக்க முழுக்க ரேஸுக்காக அதிக வேகத்தில், காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல பிரத்தேகமாக வடிவமைக்கப்படுபவை.

இதன் என்ஜின் 3.5 லிட்டர் ட்வின்-டர்போ V6, மணிக்கு 290 கி.மீ வேகம் வரை சீறிப்பாயும். அதேசமயம் குறைந்த வேகத்தில் அதிக பவர், பிரேக்கிங் என கை கட்டுப்பட்டுக்குள் எளிதாக வந்துவிடும். காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல எடை குறைவாக கார்ப்பன் ஃபைபர் மெட்டீரியலால் 950 கிலோவில் செய்யப்படுபவை இந்த வகை கார்கள்.

2025-இல் புதிய இன்ஜின்கள், தொழில்நுட்ப மேம்பாடுகள் என முந்தைய ஜெனரேஷனைவிட இந்த LMP3 கார் பவர்புஃலாக இறங்கியிருக்கிறது. இந்தக் காரில்தான் அஜித் டிசம்பர் மாதம் வரப்போகும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் களமிறங்கப்போகிறார்.

கரூர் மரணங்கள்: "உயிரிழந்தோரைக் கண்டு பெருந்துயர் கொள்கிறோம்" - STR49 படக்குழு

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பரப்புரையில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகம் நடைபெற்றது.கரூர் சோகம்விஜய்யைக் காணக் கூடியவர்களில் பலர் க... மேலும் பார்க்க

Sasikumar: "என் வளர்ச்சிக்காக இந்தப் படத்தில சசி அண்ணா நடிக்க ஒத்துக்கிட்டாரு" -'யாத்திசை' இயக்குநர்

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. 2023-ம் ஆண்டு தரணி ராசேந்திரன் இயக்கத்தில்... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் மரணங்கள்: "விஜய்யின் மனசு எவ்வளவு பாரமாக இருந்திருக்கும்" - ஆர்.வி. உதயகுமார்

நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் 'வீர தமிழச்சி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.29) நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி உதயகுமார் கரூர்நெரிசல் மரணங்கள் குறித்துப் பேசிய... மேலும் பார்க்க

`சினிமாக் குடும்பத்தை சேர்ந்தவர், சோதனை வரும்போது சப்போர்ட்டாக இருப்போம்' -விஜய்க்கு ஆதரவாக பேரரசு

நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் 'வீர தமிழச்சி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.29) நடைபெற்றது. அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு, "விஜய் சார் இன்று அரசியல் தலைவராக இருக்... மேலும் பார்க்க