செய்திகள் :

கரூர் நெரிசல் மரணங்கள்: "விஜய்யின் மனசு எவ்வளவு பாரமாக இருந்திருக்கும்" - ஆர்.வி. உதயகுமார்

post image

நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் 'வீர தமிழச்சி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.29) நடைபெற்றது.

அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி உதயகுமார் கரூர் நெரிசல் மரணங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

"இரண்டு நாட்களாகத் தூக்கம் வரவில்லை. கரூர் சம்பவத்தில் விலைமதிப்பு இல்லாத உயிர்களை இழந்திருக்கிறோம்.

கரூர் துயர சம்பவம்
கரூர் துயர சம்பவம்

பொதுவாக அரசியல் கூட்டங்களுக்குச் செல்லும்போது குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்.

கூட்டங்களில் பங்கேற்பவர்கள் கொஞ்சம் தூரத்திலிருந்தே பாருங்கள். உயிரை இழந்த குடும்பங்கள் எப்படித் தத்தளிக்கும்.

எவ்வளவு வேதனையில் இருப்பார்கள். இதையெல்லாம் பார்த்து விஜய்யின் மனசு எவ்வளவு பாரமாக இருந்திருக்கும்.

இறந்தவர்களின் குடும்பங்களுடன் சேர்ந்து நடிகர் விஜய்க்கும் ஆதரவாக நிற்போம்.

யாரும் எதிர்பார்க்காமல் நடந்த ஒரு விபத்து. போன உயிர்களை இறைவனாலும் மீட்டெடுக்க முடியாது.

இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அரசியல் தலைவர்களும் சரி, கட்சி நிர்வாகிகளும் சரி, காவல்துறையும் சரி ஒவ்வொரு தலைவர்களுக்கும் எவ்வளவு கூட்டம் கூடுமோ? அதற்கு ஏற்றமாதிரி இடங்களை ஒதுக்கிப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று திரையுலகத்தின் சார்பாக நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

கரூர் மரணங்கள்: "உயிரிழந்தோரைக் கண்டு பெருந்துயர் கொள்கிறோம்" - STR49 படக்குழு

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பரப்புரையில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகம் நடைபெற்றது.கரூர் சோகம்விஜய்யைக் காணக் கூடியவர்களில் பலர் க... மேலும் பார்க்க

Sasikumar: "என் வளர்ச்சிக்காக இந்தப் படத்தில சசி அண்ணா நடிக்க ஒத்துக்கிட்டாரு" -'யாத்திசை' இயக்குநர்

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. 2023-ம் ஆண்டு தரணி ராசேந்திரன் இயக்கத்தில்... மேலும் பார்க்க

`சினிமாக் குடும்பத்தை சேர்ந்தவர், சோதனை வரும்போது சப்போர்ட்டாக இருப்போம்' -விஜய்க்கு ஆதரவாக பேரரசு

நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் 'வீர தமிழச்சி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.29) நடைபெற்றது. அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு, "விஜய் சார் இன்று அரசியல் தலைவராக இருக்... மேலும் பார்க்க

இட்லி கடை: ``நானும் தனுஷும் மதுரைல ரோட்டு கடையில சாப்பிடுவோம்!" - அருண் விஜய் ஷேரிங்ஸ்

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் `இட்லி கடை' படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்க... மேலும் பார்க்க

Preethi Asrani: ``அலாரம் உந்தன் love ஆகி போச்சே'' - ப்ரீத்தி அஸ்ராணி | Photo Album

ப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிப்ரீத்தி அஸ்ராணிBalti: 'தமிழ் படமும் சென்னையும் என்னுடைய... மேலும் பார்க்க