செய்திகள் :

ஜிவி பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து!

post image

இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிவதாக கடந்த 2024-ஆம் ஆண்டு அறிவித்தனர்

இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடா்பாக இருவரும் முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கியது.

6 மாத கால அவகாசம் முடிந்து, சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோா் நேரில் ஆஜராகினர். தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை, பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அப்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விவாகரத்து கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று(செப். 30) தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிக்க: கார்த்திகை தீபம் தொடரில் இணையும் கீர்த்தனா!

The Chennai Family Welfare Court has ruled in the divorce case filed by music composer G.V. Prakash and singer Sainthavi, granting them both a divorce.

விஷ்ணு விஷாலின் ஆர்யன் டீசர்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ஆர்யன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள ஆர்யன் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திர... மேலும் பார்க்க

கார்த்திகை தீபம் தொடரில் இணையும் கீர்த்தனா!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் நடிகை கீர்த்தனா பொதுவல் இணையவுள்ளார். நினைத்தேன் வந்தாய் தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்த கீர்த்தனா, தற்போது கார்த்திகை தீபம் தொடரில் முக்க... மேலும் பார்க்க

தெலுங்கு புரமோஷனில் கன்னடம்... விமர்சனத்திற்கு ஆளான ரிஷப் ஷெட்டி!

காந்தாரா சேப்டர் 1 தெலுங்கு புரமோஷனில் நடிகர் ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசியது விமர்சிக்கப்பட்டு வருகிறது.நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆ... மேலும் பார்க்க

ஸ்ரீமத் ராமாயணம் தொடரின் குழந்தை நட்சத்திரம் பலி!

ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமான வீர் ஷர்மா தனது வீட்டில் நேர்ந்த தீ விபத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் வீர் ஷர்மாவின் சகோதரர் செளர்யா ஷர்மாவும் ... மேலும் பார்க்க

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்!

2025 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் இணையதள ஜோதிடர் ராமராமானுஜ தாசன் தெரிவித்துள்ளார்.கல்விக்கு அதிபதியும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளை வைத்து சரஸ்வத... மேலும் பார்க்க