கரூர் மரணங்கள்: "பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது" - விஜய் குறித...
சரஸ்வதி பூஜை - விஜய தசமி: பூஜை செய்ய, ஏடு எடுக்க உகந்த நேரம் எது?
நவராத்திரியில் நிறைவாக வரும் மூன்று நாள்கள் நாம் சரஸ்வதி தேவியை வழிபடுவோம். இந்த நாளில் பாடப்புத்தகங்கள், தினமும் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தையும் சரஸ்வதியின் ரூபமாகப் பாவித்து அவற்றை சுவாமி அருகே அடுக்கி வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
சரஸ்வதியை ஆதி சக்தியாக நினைத்து வழிபடும் இந்த நாளில் செய்யும் பூஜைகள் புண்ணிய பலன்களைத் தரும். குறிப்பாக மாணவர்களுக்குப் படிப்பில் இருக்கும் குறைகள் நீங்கும். சிலருக்குப் படிப்பவைத் தேர்வு நேரத்தில் மறந்துபோகும். சரஸ்வதி பூஜை அன்று பூஜை செய்து வழிபடுவதன் மூலம் அந்தக் குறை நீங்கிக் கல்வியில் மேன்மை உண்டாகும்.
இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. புதன்கிழமையும் நவமி திதியும் கூடிய இந்த நாளில் காலை வேளையில் எம கண்டம் முடிந்ததும் பூஜை செய்வது சிறப்பானது. அதாவது காலை 7.30 மணி முதல் 9 மணி வரை எம கண்டம். எனவே 9.15 முதல் 10.15 மணிக்குள் குருஹோரையில் பூஜை செய்வது விசேஷம். கல்வியில் மேன்மை அடைய குருவின் அனுக்கிரகம் அவசியம். எனவே இந்த நேரத்தைப் படிக்கும் மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு சரஸ்வதியை வழிபடலாம்.
அலுவலக பூஜை செய்பவர்கள் பிற்பகலில் 12 மணி முதல் 1.30 மணி வரையிலான ராகு கால நேரத்தைத் தவிர்த்து பிற நேரங்களில் பூஜை செய்யலாம்.

சரஸ்வதி அஷ்டோத்திரம்
சரஸ்வதிக்குப் பூஜை செய்யும்போது வெண் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்வது விசேஷம். வெண் தாமரை கிடைக்காதவர்கள் பிற வாசமுள்ள மலர்களைக் கொண்டு அர்ச்சிக்கலாம்.
ஓம் ஸரஸ்வத்யை நம
ஓம் மஹா பத்ராயை நம
ஓம் மஹா மாயாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் ஸ்ரீ ப்ரதாயை நம
ஓம் பத்ம நிலயாயை நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் பத்ம வக்த்ராயை நம
ஓம் சிவா நுஜாயை நம
ஓம் புஸ்தக ப்ருதே நம
ஓம் ஜ்ஞாந முத்ராயை நம
ஓம் ரமாயை நம
ஓம் பராயை நம
ஓம் காமரூபாயை நம
ஓம் மஹா வித்யாயை நம
ஓம் மஹாபாதக நாசிந்யை நம
ஓம் மஹாச்ரயாயை நம
ஓம் மாலிந்யை நம
ஓம் மஹோ போகாயை நம
ஓம் மஹா புஜாயை நம
ஓம் மஹா பாகாயை நம
ஓம் மஹாத்ஸாஹாயை நம
ஓம் திவ்யாங்காயை நம
ஓம் ஸுரவந்தி தாயை நம
ஓம் மஹா காள்யை நம
ஓம் மஹா பாசாயை நம
ஓம் மஹா காராயை நம
ஓம் மஹாங்கு சாயை நம
ஓம் பீதாயை நம
ஓம் விமலாயை நம
ஓம் விச்வாயை நம
ஓம் வித்யுந் மாலாயை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் சந்த்ரிகாயை நம
ஓம் சந்த்ரவதநாயை நம
ஓம் சந்த்ரலேகா விபூஷி தாயை நம
ஓம் ஸாவித்ர்யை நம
ஓம் ஸுரஸாயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நம
ஓம் வாக் தேவ்யை நம
ஓம் வஸுதாயை நம
ஓம் தீவ்ராயை நம
ஓம் மஹாபத்ராயை நம
ஓம் மஹாபலாயை நம
ஓம் போக தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் பாமாயை நம
ஓம் கோவிந்தாயை நம
ஓம் கோமத்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் ஜடிலாயை நம
ஓம் விந்த்ய வாஸாயை நம
ஓம் விந்தயாசல விராஜி தாயை நம
ஓம் சண்டிகாயை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் ப்ராஹ்ம்யை நம
ஓம் ப்ரஹ்மஜ்ஞானைஸாத் நாயை நம
ஓம் ஸெளதாமிந்யை நம
ஓம் ஸுதா மூர்த்யை நம
ஓம் ஸுபத்ராயை நம
ஓம் ஸுரபூஜிதாயை நம
ஓம் ஸுவாஸிந்யை நம
ஓம் ஸுநாஸாயை நம
ஓம் விநித்ராயை நம
ஓம் பத்மலோசநாயை நம
ஓம் வித்யா ரூபாயை நம
ஓம் விசாலாக்ஷ்யை நம
ஓம் ப்ரஹ்மஜாயை நம
ஓம் மஹா பலாயை நம
ஓம் த்ரயீ மூர்த்யை நம
ஓம் த்ரிகால ஜ்ஞாயை நம
ஓம் திரிகுணாயை நம
ஓம் சாஸ்தர ரூபிண்யை நம
ஓம் சும்பாஸுர ப்ரமதிந்யை நம
ஓம் சுபதாயை நம
ஓம் ஸ்வராத் மிகாயை நம
ஓம் ரக்த பீஜ நிஹந்த்ர்யை நம
ஓம் சாமுண்டாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் முண்டகாய ப்ரஹரணாயை நம
ஓம் தூம்ர லோசந மர்தநாயை நம
ஓம் ஸர்வ தேவ ஸ்துதாயை நம
ஓம் ஸெளம்யாயை நம
ஓம் ஸுராஸுரநமஸ்க்ருத தாயை நம
ஓம் காளராத்ர்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் ரூப ஸெளபாக்யதாயிந்யை ந
ஓம் வாக் தேவ்யை நம
ஓம் வரா ரோஹாயை நம
ஓம் வாராஹ்யை நம
ஓம் வாரிஜால நாயை நம
ஓம் சித்ராம்பராயை நம
ஓம் சித்ர கந்தாயை நம
ஓம் சித்ரமால்ய விபூஷி தாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காம ப்ரதாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் வித்யாதாரஸுபூஜிதாயை நம
ஓம் ச்வேதாந நாயை நம
ஓம் நீல புஜாயை நம
ஓம் சதுர்வர்க பலப்ரதாயை நம
ஓம் சுதராநத ஸாம் ராஜ்யாயை நம
ஓம் ரக்த மத்யாயை நம
ஓம் நிரஞ்ஜ நாயை நம
ஓம் ஹம்ஸாஸ நாயை நம
ஓம் நீல ஜங்க்காயை நம
ஓம் ப்ரஹம விஷ்ணு நம
ஓம் சிவாத்மிகாயை நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

அஷ்டோத்திர பூஜை முடிந்தத்தும் ஏதேனும் ஒரு நிவேதனம் செய்து பூஜையை நிறைவு செய்யலாம். சரஸ்வதி பூஜை முடிந்தபின் அதில் வைத்த புத்தகங்களை அல்லது பிற உபகரணங்களை அன்றே எடுத்து உபயோகப்படுத்தக் கூடாது. மறுநாள் விஜய தசமி நாளில் மட்டுமே எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
ஏடு எடுக்க உகந்த நேரம்
சரஸ்வதி பூஜை அன்று புத்தகத்தை அடுக்குவதை ஏடு அடுக்குதல் என்பார்கள். மறுநாள் விஜய தசமியில் புத்தகங்களை எடுத்துப் படிப்பதை ஏடு எடுத்தல் என்பார்கள். அவ்வாறு விஜய தசமி நாளில் ஏடு எடுக்கவும் எழுத்தறிவிக்கவும் (அட்சராப்யாசம்) நல்ல நேரங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. 2.10.25 அன்று காலை 10 மணி முதல் 11 மணிக்குள் புதன் ஹோரையில் ஏடு எடுக்கவும் அட்சராபியாசம் செய்யவும் உகந்த நேரமாகும்.

முதன்முதலாக குழந்தைக்குக் கல்வி கற்கத் தயார்படுத்தும் சடங்கே அட்சராபியாசம். இந்த நாளில் கல்வியில் சிறந்தவர்கள் வீட்டுக்குப் பிள்ளைகளை அழைத்துச் சென்று அவர்கள் கையால் குழந்தையை நெல் நிரப்பிய தாம்பாளத்தில் அட்சரங்களை எழுதச் சொல்வது சிறப்பு. இப்படிச் செய்வதன் மூலம் குழந்தையின் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.
விஜய தசமி அன்று புதிய கலைகள், தொழில்கள் தொடங்கலாம். இதன் மூலம் செய்யும் தொழிலில் விருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.