செய்திகள் :

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை: நிலக்கோட்டை சந்தையில் களைகட்டிய விற்பனை; மல்லி, அரளி விலை உச்சம்

post image

ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் தசரா பண்டிகை மற்றும் நவராத்திரி, ஆயுத பூஜை விழா காலங்களையொட்டி பூக்கள் விற்பனை களைகட்டி உள்ளது.

பூக்களை வாங்குவதற்காக கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மலர் சந்தையில் அதிகாலை முதல் குவிய தொடங்கினர்.

நிலக்கோட்டை மலர் சந்தை

இதனால் பூக்களின் விலை அதிகமாக விற்பனையானது. இன்று நிலக்கோட்டை மலர் சந்தையில் ஆயுத பூஜை விற்பனை தொடங்கியது. கடந்த வாரம் 80 இலிருந்து 100 ரூபாய் வரை விற்பனையான அரளிப்பூ இன்று 700 ரூபாய்க்கும், சிவப்பு அரளிப்பூ 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

குறிப்பாக ஆயுத பூஜை விழாவிற்கு அதிகம் பயன்படும் கதம்ப மாலைப் பூக்களுக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டது.

நிலக்கோட்டை மலர் சந்தை

இதே போல் ரூபாய் இருபதுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டு துளசி ரூ.130-க்கு விற்பனையானது. மல்லிகைப்பூ ரூ.900-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், நாட்டுச் சம்பங்கி ரூ.350-க்கும், பட்டு ரோஜா ரூ.130-க்கும் விற்பனையானது.

பூக்கள் வரத்து இருந்தபோதிலும் பூக்களுக்கு நல்ல விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நவராத்திரி கொலு உற்சவம்: நெல்லையப்பர் கோயில் தல வரலாற்றைப் பறைசாற்றும் ஓவியங்கள் | Photo Album

நவராத்திரி விழா: நெல்லையப்பர் திருக்கோயில் தல பெருமையை பறைசாற்றும் கொலு உற்சவம் ஓவியங்கள்.!நவராத்திரி விழா: நெல்லையப்பர் திருக்கோயில் தல பெருமையை பறைசாற்றும் கொலு உற்சவம் ஓவியங்கள்.!நவராத்திரி விழா: ந... மேலும் பார்க்க

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயில் நவராத்திரி விழா கொலு உற்சவம் | Photo Album

திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் நவராத்திரி விழா கொழு உற்சவம்.!திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் நவராத்திரி விழா கொழு உற்சவம்.!திருநெல்வேலி நெல்லையப்பர்-... மேலும் பார்க்க

நவராத்திரி பொம்மைகள்: 'ராஜ அலங்கார முருகன் முதல் தலையாட்டி பொம்மை வரை' | Photo Album

பங்குனி மாதத்தில்... நினைத்ததை நிறைவேற்றித் தரும் அபூர்வ அம்பாள் வழிபாடு! வசந்த நவராத்திரி மகிமைகள்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KE... மேலும் பார்க்க

கோத்தகிரி ஹெத்தையம்மன் கோயில்: 25 வருடங்களுக்குப் பிறகு நடந்த குடமுழுக்கு; பரவசத்தில் பக்தர்கள்

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் மூதாதையர்களான ஹெத்தையம்மனையும் ஹிரியோடையாவையும் குல தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர்.விதைப்பு, அறுவடை என ஒவ்வொரு நிகழ்விலும் குலதெய்வ ... மேலும் பார்க்க

Onam: 'சின்ன சின்ன கைகள், பெரிய கொண்டாட்டங்கள்' - வத்தலகுண்டு பள்ளியில் ஓணம் பண்டிகை | Photo Album

ஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம் மகிழ்ச்சிஓணம்... மேலும் பார்க்க

Onam: கொளத்தூர் ஜெய் கோபால் கரடியா பள்ளியில் ஓணம் கொண்டாட்டத்தில் சிறுவர் சிறுமிகள்! | Photo Album

Onam Releases Review: ஓணம் டிரீட்டாக திரைக்கு வந்திருக்கும் மலையாளப் படங்கள் எப்படி இருக்கிறது? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவண... மேலும் பார்க்க