செய்திகள் :

விருதுநகர்: நடைபெறாத செப்டம்பர் மாதத்திற்கான நகராட்சி கூட்டம்; அடிப்படை வசதிகளுக்குச் சிக்கல்

post image

விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சம் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

இதேபோல் குழாய்கள் பழுது நீக்கும் பணிகளும் தனியார் மூலம் சீர் செய்யப்படுகின்றன. மேலும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அதிலும் பல வார்டுகளுக்கு முழுமையாக தாமிரபரணி குடிநீர் கிடைக்கவில்லை.

கழிவு நீர் வடிகால் கட்டும் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. மேலும், பாதாளச் சாக்கடை அடைப்பை நீக்குவதற்காக வாங்கப்பட்ட 2 ஜெட் ராடர் வாகனங்களிலும் பழுது ஏற்பட்டுள்ளன.

புதை சாக்கடையில் மண் அள்ளும் வாகனங்களும் பழுதாகி நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளும் சரிவர நடைபெறவில்லை. இப்படி ஏராளமான அடிப்படைப் பிரச்னைகள் உள்ளன.

விருதுநகர் நகராட்சி
விருதுநகர் நகராட்சி

ஆனால், விருதுநகர் நகராட்சியில் செப்டம்பர் மாதம் நடத்த வேண்டிய சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நடைபெறவில்லை. இதனால், நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை கூட்டங்களில் பேசி தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், "ஆணையாளர் சுகந்தி, கோவில்பட்டி நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக விருதுநகர் நகராட்சியைக் கவனித்து வருகிறார். பொறியாளர் உடல்நலக் குறைவால் விடுப்பில் உள்ளார்.

இன்றுதான் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இதன் காரணமாக மன்ற பொருள் ஏதும் தயார் செய்யவில்லை. எனவே, கூட்டம் நடத்தவில்லையெனத் தெரிவிக்கின்றனர். நகராட்சியில் மாதத்தில் ஒருநாள் அவசியம் கூட்டம் நடத்த வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால், அதை காற்றில் பறக்கவிட்டு விட்டு கூட்டம் நடத்தாமல் இருப்பது நியாயமல்ல.

இது ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல் என நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர், இப்பிரச்னையில் உடனடியாகத் தலையீடு செய்து மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் பெருந்துயரம்: "யாரும் இதை விரும்ப மாட்டார்கள்; வதந்திகளை பரப்ப வேண்டாம்" - முதல்வர் ஸ்டாலின்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த துயர சம்பவம் க... மேலும் பார்க்க

TVK Vijay Karur Stampede: நெஞ்சை உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் | Photo Album

TVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vijay Karur StampedeTVK Vija... மேலும் பார்க்க

கரூர்: ``திடீர் மின்தடை, குறுக்கே ஆம்புலன்ஸ், இருட்டில் தடுமாறி விழுந்தனர்" - பாதிக்கப்பட்ட நபர்

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.கூட்ட நெரிசலில் 38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள... மேலும் பார்க்க

கரூர்: விஜய் பரப்புரைக்கு சரியான இடம், முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டதா? - DGP வெங்கடராமன் பதில்

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 27,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.கூட்ட நெரிசலில் 38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50... மேலும் பார்க்க

கரூர்: ``இது தவிர்க்க முடியாத விபத்துதான், தம்பி விஜய்யும் மனவேதனையில்தான் இருப்பார்" - சீமான்

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 33-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள... மேலும் பார்க்க

கரூர்: ``கற்பனை செய்ய முடியாத சோகம்'' - ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இரங்கல்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூர் பகுதியில் பரப்புரை நடத்தினார். 30,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் கூடியதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிற... மேலும் பார்க்க