செய்திகள் :

ஆதவ் அர்ஜுனா: "விரைவில் அவர்களைச் சந்திப்போம்" - செய்தியார்களிடம் ஆதவ் பேசியதென்ன?

post image

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்யோ அல்லது தவெக நிர்வாகிகளோ சென்று சந்திக்காதது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

கரூர் கூட்ட நெரிசல் சோகக் காட்சிகள்
கரூர் கூட்ட நெரிசல்

காவல்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கரூர் தவெக மாவட்டச் செயலாளர், பொருளாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில தவெக தலைமை நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கரூர் நெரிசல் குறித்த வழக்கில் முன் ஜாமீன் வேண்டி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதற்கிடையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துக்களைப் பதிவிட்டதாகவும், அதனை நீக்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

இந்தநிலையில் கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, "என் வாழ்க்கையில் என்னுடைய அம்மாவின் இழப்புக்குப் பிறகு, என்னுடைய 41 குடும்பங்களின் இழப்பு மிகப் பெரிய வலியைக் கொடுத்திருக்கிறது. இப்போது எதுவும் பேசும் மனநிலையில் இல்லை. கூடிய சீக்கிரம் அவர்களை (பாதிக்கப்பட்டவர்களை) சந்திப்போம். அவர்களுடன் மிகப் பெரிய பயணம் தொடரும்." எனப் பேசியுளார்.

கரூர் மரணங்கள்: "பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது" - விஜய் குறித்து ஆளூர் ஷாநவாஸ்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.இன்று இதுகுறித்து வீடியோ வெளியிட்ட விஜய், "கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்குப் பிரசாரத்துக்குப் போனோம். அங்கெல்ல... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" - CPI(M) கண்டனம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் விஜய் இன்று (செப் 30) மா... மேலும் பார்க்க

விஜய் வீடியோவும் சில கேள்விகளும்: "உங்களின் கிரீடத்தை முதலில் கழற்றி வையுங்கள் விஜய்!"

கரூர் பெருந்துயர் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவரைக் காண வந்து உயிரைப் பறிகொடுத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார். அதில், 'இரண்டு வா... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் கூட நெரிசலில் சிக்கு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ஏ.டி.ஜி.பி டேவிட்சன், மருத்துவத்துற... மேலும் பார்க்க

"கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு" -எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 42 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தத் துயர சம்பவம்... மேலும் பார்க்க