Ennore: சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து; வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலி
சென்னை அருகே இருக்கும் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அனல் மின் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அமைக்கப்பட்ட சாரத்தில் ஏறி பணியாற்றி வந்திருக்கின்றனர் கட்டுமான தொழிலாளர்கள். திடீரென்று சாரம் நிலைகுலைந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் மிகுந்த காயமடைந்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் பணியாற்றியவர்களில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் என்றும் பலியாகியிருக்கும் 9 பேரும் வடமாநிலத்தவர் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், கட்டுமானப் பணியின் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.