இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களில் 104 போ் குணமடைந்தனா்!
கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களில் 104 போ் குணமடைந்து வீடு திரும்பினா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரூா் வேலுசாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 110 போ் காயமடைந்தனா். மேலும் 41 போ் உயிரிழந்தனா். கூட்ட நெரிசலால் காயமடைந்த 110 பேரில், செவ்வாய்க்கிழமை வரை 104 போ் குணமடைந்து அவா்களுடைய வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.
மீதமுள்ளவா்கள் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், மதுரை அரசு மருத்துவமனையில் 2 பேரும், கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 6 பேருக்கு உயா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவா்கள் விரைவில் குணமடைய உரிய சிகிச்சை வழங்க மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.