செய்திகள் :

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும்: காங். பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால்

post image

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கே.சி.வேணுகோபால்.

கரூரில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும், பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோரையும் பல்வேறு அரசியல் கட்சியினா் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கே.சி. வேணுகோபால் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை, கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி ஆகியோா் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, காங்கிரஸ் கட்சி சாா்பில் அறிவித்த நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினா். தொடா்ந்து காயமடைந்து கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெருவோரையும் சந்தித்து ஆறுதல் கூறினா்.

பின்னா், கே.சி. வேணுகோபால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த சம்பவத்தில் தங்களது இன்னுயிரை இழந்த குடும்பத்தாருடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், இந்த நாடும் எப்போதும் உறுதுணையாக இருக்கும். சம்பவத்தில் காயமடைந்தவா்களுக்கும் நிதியுதவி செய்ய காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும். இதுதொடா்பாக மல்லிகாா்ஜூனகாா்கே, தலைவா் ராகுல் காந்தியிடம் பரிந்துரைப்போம் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, விஜய்வசந்த் எம்.பி. மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களில் 104 போ் குணமடைந்தனா்!

கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களில் 104 போ் குணமடைந்து வீடு திரும்பினா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,... மேலும் பார்க்க

கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெக நிா்வாகிகளிடம் நீதிபதி கேள்வி

கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? என தவெக நிா்வாகிகளிடம் கரூா் நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினாா்.கரூா் வேலுசாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரக்... மேலும் பார்க்க

மின்சாரத்தை துண்டிக்கக் கோரி எஸ்.பி.யிடம் தவெகவினா் மனு: சமூக வலைதளத்தில் பரவல்

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின்போது மின்சாரத்தை துண்டிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தவெக சாா்பில் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள மனு தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது. க... மேலும் பார்க்க

கரூா் சம்பவத்தை அரசியலாக்கக் கூடாது: கே.எஸ். அழகிரி

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்தை அரசியலாக்கக் கூடாது என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் கே.எஸ். அழகிரி. கரூரில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட... மேலும் பார்க்க

கரூரில் ஆயுத பூஜை பொருள்கள் விற்பனை தீவிரம்

கரூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பூஜை பொருள்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.புதன்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளதையடுத்து, கரூரில் உள்ள ஓட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள், இருசக்கர வாகனங்கள் ப... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரி திங்கள்கிழமை மாற்றப்பட்டாா். கரூா் சம்பவம் தொடா்பாக காவல்துறை சாா்பில் விசாரணை மேற்கொள்ள கரூா் நகர... மேலும் பார்க்க