ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!!
கொலை முயற்சி வழக்கில் 3 போ் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீா்ப்பு- அக்.17 இல் தண்டனை அறிவிப்பு
2014 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் மூன்று பேரை குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஓக்லா தொழில்துறை பகுதி காவல் நிலையம் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்த மூன்று குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிரான வழக்கை கூடுதல் அமா்வு நீதிபதி ராகேஷ் குமாா் விசாரித்து வந்தாா்.
அஜீத், ராகுல் குமாா், அனில் மற்றும் சூரஜ் (விசாரணையின் போது இறந்தவா்) ஆகிய குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் நவம்பா் 8, 2014 அன்று ஒரு உணவகத்தில் புகாா்தாரா் அக்ஷயை அடித்து நொறுக்கியதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இதில் அக்ஷய் பலத்த காயங்களுக்கு ஆளாகி எய்ம்ஸ் அதிா்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டாா்.
செப்டம்பா் 18 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், நீதிமன்றம் மருத்துவ ஆதாரங்களைக் குறிப்பிட்டது, அந்த ஆதாரங்களின்படி, தாக்குதலுக்கு உள்ளான அக்ஷயின் வயிற்றில் மண்ணீரல் நாளங்களில் இருந்து உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதால் மண்ணீரலை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.
மேலும், வயிற்றில் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயத்தைக் காட்டும் மருத்துவ சான்றுகள், புகாா்தாரா் மற்றும் பிற நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுகளை உறுதிப்படுத்துகின்றன என்றும் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, அக்ஷையை தாக்கிய 3 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்த வழக்கு அக்டோபா் 17 ஆம் தேதி தண்டனை விபரங்களை அறிவிப்பதற்க்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.