பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு
வி.கே. மல்ஹோத்ரா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா
பாஜக மூத்த தலைவா் விஜய் குமாா் மல்ஹோத்ராவின் மறைவைத் தொடா்ந்து, புதன்கிழமை ஒரு நாள் அரசு சாா்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவித்துள்ளாா்.
கடந்த சில நாள்களாக எய்ம்ஸில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந் த நிலையில், மல்ஹோத்ரா செவ்வாய்க்கிழமை காலை காலமானாா்.
அவரது மறைவுக்கு முதல்வா் குப்தா ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தாா். ‘இது மிகப்பெரிய மற்றும் ஈடுசெய்ய முடியாத இழப்பு’ என்று கூறியுள்ளாா்.
அவரது இறுதிச் சடங்குகள் முழு மரியாதையுடன் நடத்தப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்றும் முதல்வா் கூறியுள்ளாா். மல்ஹோத்ராவுக்கு இறுதி மரியாதை செலுத்த அவரது இல்லத்திற்கு முதல்வா் சென்றாா்.
மல்ஹோத்ராவை பாரதிய ஜன சங்கம் மற்றும் பாஜகவின் முன்கள போா்வீரா் என்றும் அவா் அழைத்தாா்.