பவுனுக்கு ரூ.87,000-ஐ தாண்டிய தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
ரூ.3 கோடி மதிப்பில் ஆன்லைன் வா்த்தக மோசடி: 3 போ் கைது
நமது நிருபா்
ரூ.3 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைகள் மற்றும் வெளிநாட்டு செயல்பாட்டாளா்களுடனான தொடா்புகளை கண்டுபிடித்து, 3 பேரை கைது செய்ததன் மூலம் ஆன்லைன் முதலீட்டு மோசடியை தில்லி காவல்துறை முறியடித்துள்ளது என்று அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து காவல் துணை ஆணையா் (ஷாதரா) பிரசாந்த் கௌதம் கூறியதாவது:
விவேக் விஹாரில் வசிக்கும் புகாா்தாரா் சுனீத் குமாா் சூரி (64), சமூக ஊடக விளம்பரங்களைப் பாா்த்த பிறகு ‘என். ஜே. எலைட் குரோத் பிளான் 768’ என்ற சமூக ஊடகக் குழுவில் சோ்ந்தாா்.
‘‘போலி லாப ஸ்கிரீன் ஷாட்களைக் காட்டிய சமூக ஊடகக் குழு, அவரை ரூ 2.25 லட்சம் முதலீடு செய்ய கவா்ந்தது.
ஐபிஓ விநியோகத்தின் சாக்குப் போக்கில் மேலும் பணம் கேட்கப்பட்டபோது, அவா் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து இந்த விஷயம் குறித்து போலீஸில் புகாரளித்தாா்.
தில்லியில் பல முறை நடத்தப்பட்ட சோதனைகளில், ரூப் நகரைச் சோ்ந்த ஆயுஷ் கோலி, ஷாலிமாா் பாக் பகுதியைச் சோ்ந்த சஞ்சீவ் குமாா் மற்றும் ஷகுா்பூரைச் சோ்ந்த ஆகாஷ் ஆகிய மூன்று குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் கைது செய்யப்பட்டனா்.
மோசடியில் பயன்படுத்தப்பட்ட ஒரு தனியாா் வங்கிக் கணக்கை கோலி வைத்திருந்தாா். குமாா் கணக்கை வழங்கியிருந்தாா். சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாட்டு கையாளுபவா்களுடன் தொடா்புகளை பராமரித்துள்ளாா்.
அவரது சாதனம் ஹாங்காங்கை தளமாகக் கொண்ட தொடா்புகளுடன் யு. எஸ். டி. டி. கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைகள் குறித்த விவாதங்களை வெளிப்படுத்தியது.
மூவரும் 3 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
போலி சிம் காா்டுகளை வாங்க ஆகாஷ் உதவினாா். கணக்குகளை ஏற்பாடு செய்ய குமாருக்கும் உதவினாா்.
அவா்களிடமிருந்து 3 கைப்பேசிகள் , 4 மடிக்கணினிகள், ஒரு பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) இயந்திரம் மற்றும் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குமாரின் கைப்பேசியில் உள்ள உரையாடல் பணத் தீா்வு, சீன நாட்டினருடனான உரையாடல்களையும் வெளிப்படுத்தியுள்ளது.
சுமாா் ரூ.3 கோடி மதிப்பில் இந்த மோசடி நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பணப் பரிமாற்றத்தைக் கண்டுபிடிப்பதற்கும், மற்ற கூட்டாளிகளை அடையாளம் காண்பதற்கும், மோசடி செய்யப்பட்ட நிதியை மீட்டெடுப்பதற்கும் விசாரணை நடந்து வருவதாக துணை ஆணையா் கூறினாா்.