75 வயதில் 35 வயது பெண்ணுடன் திருமணம்; மறுநாள் நடந்த அதிர்ச்சி
டிடிஏ அதிகாரியை பதவியில் இருந்து நீக்கி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவு
நமது நிருபா்
சப்தா்ஜங் என்கிளேவ் பகுதியில் நில ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாகக் கூறி தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி. டி. ஏ) உதவி பிரிவு அதிகாரியை பணிநீக்கம் செய்ய துணை நிலை ஆளுநா் வி கே சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, தில்லி அரசாங்கத்தின் நிலம் மற்றும் கட்டடத் துறை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு டி. டி. ஏ-க்கு விசாரணை நடத்த பரிந்துரைத்த அதே விஷயத்தில் இது மூன்றாவது பணிநீக்கம் ஆகும்.
‘ஊழல் பொறுத்துக்கொள்ளப்படாது என்பதற்கான மற்றொரு அறிகுறியாகவும், தவறு செய்த டி. டி. ஏ ஊழியா்களுக்கு மற்றொரு வலுவான சமிக்ஞையாகவும், விகே சக்சோனா பணிநீக்க உத்தரவை விதித்துள்ளாா். இந்த விஷயத்தில் மற்றொரு ஊழியருக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு அவா் டி. டி. ஏவைக் கேட்டுள்ளாா் ‘என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.
குற்றச்சாட்டுகளின்படி, பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி மற்றும் அவரது சகாக்கள் தெற்கு தில்லியின் ஆடம்பரமான சப்தா்ஜங் என்கிளேவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்களின் அடிப்படையில், பயனாளியுடன் இணைந்து ஒதுக்கியுள்ளனா்.
நிலம் மற்றும் கட்டடத் துறையிலிருந்து பரிந்துரை கடிதம் கிடைத்ததாகக் கூறப்பட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த போதிலும், பணிநீக்கம் செய்யப்பட்ட டி. டி. ஏ ஊழியா் இந்த வழக்கை விடாமுயற்சியுடன் விசாரிக்கத் தவறிவிட்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தவறான நோக்கத்துடன் வெளியாட்களுடன் இணைந்திருப்பதையும், வழக்கைக் கையாளும் ஊழியா்களின் தவறான நோக்கங்களையும் சுட்டிக்காட்டுகிறது என்று அவா்கள் கூறினா்.