டி20-ல் புது வரலாறு..! தரவரிசையில் சாதனையுடன் முதலிடத்தில் அபிஷேக் சர்மா!
மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக மல்லிகார்ஜுன கார்கே (வயது 83) இன்று காலை அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவலை உறுதி செய்து கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே தெரிவித்திருப்பதாவது:
“கார்கே இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நிலையாகவும் நலமுடனும் இருக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி நாகலாந்தில் மிகப்பெரிய அளவில் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருக்கும் பொதுக் கூட்டத்தில் கார்கே கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார்.
தற்போதைய அறுவைச் சிகிச்சையின் காரணமாக, அந்த பொதுக் கூட்டத்தில் கார்கே கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கருதப்படுகிறது.