செய்திகள் :

மார்பக ஆரோக்கியம்; எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

post image

மார்பகங்கள் வெறும் அழகுக்கான அடையாளம் கிடையாது. அவை ஆரோக்கியத்துக்கான காரணியும்கூட.

மார்பகங்களின் ஆரோக்கியத்துக்கு எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயராணியிடம் கேட்டோம்.

கருத்தடை மாத்திரை மார்பகப்புற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா?
கருத்தடை மாத்திரை மார்பகப்புற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா?

குடும்ப வரலாற்றில் ஏற்கெனவே ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பிருந்தால், அப்படிப்பட்ட பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதைத் தவிர்ப்போம்.

இந்த மாத்திரைகளில் இருக்கிற ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், மார்பகப் புற்றுக்கான வாய்ப்பை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அதிகப்படுத்திவிடலாம்.

இவர்கள் மாத்திரைகளைத் தவிர்த்துவிட்டு, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, மற்ற கருத்தடை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறுக்கமான பிராக்களைத் தொடர்ந்து அணிந்தால், மார்பகங்களில் ரத்த ஓட்டம் தடைப்படுகிற பிரச்னை வரும். இதனால் மார்பகங்களில் புற்றுநோய் ஏற்படும் என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.

பொதுவாக, சீரான ரத்த ஓட்டம் தடைப்படும் வகையிலான பிரா அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

இறுக்கமான பிரா மார்பகப் புற்றை ஏற்படுத்துமா?
இறுக்கமான பிரா மார்பகப் புற்றை ஏற்படுத்துமா?

மார்பகங்களைப் பெரியதாக்கும் என்று விளம்பரம் செய்யப்படுகிற மசாஜ் க்ரீம், மாத்திரைகளில் ஆரம்பித்து மார்பகங்களுக்குள்  சிலிக்கான் வைத்துப் பெரியதாக்கும் அறுவை சிகிச்சைவரை எல்லாமே பெண்களுக்கு ஆபத்தான விஷயங்கள்தாம்.

இவற்றால், மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

மெனோபாஸ் நேரத்தில் சில பெண்களுக்கு ஹார்மோன் தெரபி சிகிச்சை செய்யவேண்டி வரலாம். அது அளவு அதிகமாகிவிட்டால், மார்பக கேன்சரை ஏற்படுத்திவிடலாம்.

ஆனால், மருத்துவர்கள் நாங்கள் பெண்களின் உடல்நிலைக்கு ஏற்ப, பாதுகாப்பான அளவில்தான் இந்த ஹார்மோன் சிகிச்சையை வழங்குவோம்.

மார்பக மசாஜ் நல்லதா?
மார்பக மசாஜ் நல்லதா?

சில துளிகள் ஆலிவ் ஆயிலை மார்பகங்களில் தடவி, தினமும் 10 நிமிடங்கள் மட்டும் மென்மையாகக்  கடிகாரச் சுழற்சியில் மசாஜ் செய்து வருவது மார்பகங்களுக்கு நல்லது. இதனால், மார்பகங்களில் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, மார்பகங்களுக்குள்ளே உருவாகும் சிறு சிறு நார்க்கட்டிகள் வராமல் தடுக்கலாம்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு, உடலில் ஈஸ்ட்ரோஜெனின் சுரப்பும் அதிகமாக இருக்கும். அளவுக்கு அதிகமான ஈஸ்ட்ரோஜென் மார்பகங்களுக்கு ஆபத்தான விஷயம். அதனால், பருமன் பிரச்னை இருப்பவர்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்று செய்து எடையைக் கட்டுக்குள் கொண்டுவருவதுதான் மார்பகங்களுக்கு நல்லது.

உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, ஹார்மோன் ஊசி போடப்பட்ட இறைச்சி வகைகளை அதிகம் சாப்பிட்டாலும் மார்பகப் புற்று வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

பச்சைக் காய்கறிகள், இயற்கைப் புரதம் நிறைந்த சுண்டல் வகைகள், தாவரக் கொழுப்பு ஆகியவை மார்பக ஆரோக்கியத்துக்கான உணவுகள்.

மற்றபடி, காலதாமதத் திருமணம், 35 வயதுக்கு மேல் முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்வது, குழந்தைக்குப் பாலூட்ட முடியாமல் போவது என இவையெல்லாம் பல நேரங்களில் நம் கைகளில் இல்லை.

அவற்றைப் பற்றி கவலைப்படாமல், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி மார்பக ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்'' என்கிறார் டாக்டர் ஜெயராணி.

Doctor Vikatan: `ஆயுத பூஜைக்கு அரிசிப் பொரி' - வெயிட்லாஸுக்கு உதவுமா, இதன் நன்மைகள் என்ன?

Doctor Vikatan: ஆயுத பூஜைக்கு வீடு நிறைய அரிசிப்பொரி நிறையும். அதைச் சாப்பிடுவதால் ஆரோக்கியப் பலன்கள் ஏதும் உண்டா... அரிசிப் பொரி சாப்பிட்டால் வெயிட்லாஸ்முயற்சி எளிதாகுமா, அதை எப்படியெல்லாம் சாப்பிடலா... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பு?

Doctor Vikatan:சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்கள். ஆரோக்கியமான நபர் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது?-ராஜா, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்... மேலும் பார்க்க

`டீன் ஏஜ் ஆண் குழந்தைகளுக்கான உணவுகள்' - பரிந்துரை செய்யும் நிபுணர்

''பெண் குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்போதே, அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவில் அம்மாக்களின் கவனம் கூடும். பருவமடைந்த பின்னர், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உணவுகள் அவர்களுக்குக் கொடுக்கப்படு... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் வெறும் தரையில் படுத்துத்தூங்கிதான் பழக்கம். ஆனால், ஊரிலிருந்துவந்த உறவினர், வெறும் தரையில் படுத்துத்தூங்கினால் ரத்தமெல்லாம் சுண்டிப்போய் விடும் என்றும் அதைத் தவிர்க்கு... மேலும் பார்க்க

காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்

காலை முதல் இரவுவரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. பல் துலக்குவது தொடங்கி இரவில் உறங்கச் செல்வதுவரை ஒவ்வொன்றுக்கும் சில வரையறைகள் உள்ளன. அவற்றை மீறாமல் அந்தச் செயல்கள... மேலும் பார்க்க

Doctor Vikatan: நெஞ்சுவலி, இசிஜி நார்மல்; அதைத்தாண்டி இன்னொரு டெஸ்ட் அவசியமா?

Doctor Vikatan:நான் 50 வயது பெண். எனக்கு சமீபத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவரை சந்தித்தேன். இசிஜி பரிசோதனையில் எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆனாலும், ட்ரோபோனின் என்ற பரிசோதனை செய்யச் சொன்னார்கள். ... மேலும் பார்க்க