தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்துள்ளது.
இதன்மூலம், தங்கத்தின் விலை கடந்த மூன்று நாள்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ. 2,000 அதிகரித்துள்ளது, ரூ. 87 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 85,120 -க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை ரூ. 86,160, செவ்வாய்க்கிழமை ரூ. 86,880 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து ரூ. 87,120 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமின் விலை ரு. 10,890 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 161-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,61,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.