நடிகர் மோகன் லாலுக்கு பிரமாண்ட பாராட்டு விழா! கேரள அரசு அறிவிப்பு!
பங்குச் சந்தை இன்றாவது உயர்வுடன் நிறைவு பெறுமா? நிலவரம் என்ன?
பங்குச் சந்தைகள் இன்று(செவ்வாய்க்கிழமை) சற்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
80,541.77 புள்ளிகளில் சரிவுடன் தொடங்கி பின்னர் ஏற்றம் கண்டு வருகிறது. வர்த்தகம் தொடங்கிய நேரத்தில் 200 புள்ளிகள் ஏற்றத்தில் இருந்த நிலையில் காலை 10.15 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 11.59 புள்ளிகள் குறைந்து 80,352.89 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி பெரிதாக மாற்றம் ஏதுமின்றி 24,634.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த வாரம் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்த நிலையில் இந்த வாரமும் நேற்று சரிவில் நிறைவடைந்தது. இன்றும் வர்த்தகம் சரிந்து வருவது முதலீட்டாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
வர்த்தக தொடக்கத்தில் நிஃப்டி 50-ல் டைட்டன், ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட், ஹிண்டால்கோ, சிப்லா ஆகியவை அதிக லாபம் ஈட்டின. மறுபுறம் அண்டிகோ, எச்டிஎஃப்சி லைஃப், ஐடிசி, எடர்னல் (ஸொமாட்டோ), டாடா மோட்டார்ஸ் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை சரிவைச் சந்தித்தன.