செய்திகள் :

வாரத்தின் முதல் நாள்.. உயர்வுடன் பங்குச் சந்தை தொடக்கம்

post image

மும்பை: வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை நிஃப்டி 50 மற்றும் மும்பை பங்குச் சந்தைக குறியீடுகள் உயர்வுடன் வணிகத்தைத் தொடங்கியிருக்கின்றன.

கடந்த வாரம் கடுமையான வீழ்ச்சிகளை சந்தித்து வந்த பங்குச் சந்தை குறியீடுகள் இன்று காலை வணிகம் தொடங்கியதும் ஏறுமுகத்தில் உள்ளன.

நிஃப்டி 50 குறியீடு 24,700 என்ற அளவிலும், மும்பை பங்குச் சந்தை குறியீடு 80 புள்ளிகள் உயர்ந்தும் இன்று காலை 9.16 மணிக்கு வர்த்தகமாகின.

இன்று காலை வணிகம் தொடங்கிய போது நிப்டி 50 குறியீடு 24,691.10 என்ற நிலையில் இருந்து 36 புள்ளிகள் உயர்ந்து வணிகத்தைத் தொடங்கியது. மும்பைப் பங்குச் சந்தை 80,51.74 என்ற அளவில் இருந்து 84 புள்ளிகள் உயர்வுடன் வணிகத்தைத் தொடங்கியது.

கடந்த வாரத்தில் பங்குச் சந்தை தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து நிப்டி 24,800 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. அமெரிக்க வரி விதிப்பு முறை, எச்1 பி விசா கட்டணம் உள்ளிட்ட சர்வதேச அளவில் நிலவும் பல்வேறு காரணிகள் பங்குச் சந்தைகளில் எதிரொலித்ததன் விளைவாக, கடந்த வாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்த வாரம் அந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் வீடுகளின் விற்பனை 21% அதிகரிக்கும்: ப்ராப் ஈக்விட்டி

புதுதில்லி: பெங்களூரில் வீட்டுச் சந்தை வலுவாக உள்ளதாகவும், ஜூலை முதல் செப்டம்பர் வரையான மாதங்களில் அதன் விற்பனை 21 சதவிகிதம் அதிகரித்து சுமார் 16,840 வீடுகள் விற்பனையாகும் என்றது ப்ராப் ஈக்விட்டி.ரியல... மேலும் பார்க்க

ஐபோனுக்கு போட்டியாக ஒன்பிளஸ் 15..! விலை, வெளியீடு, சிறப்பம்சங்கள் என்ன?

கேமிராவுக்கு என புகழ்ப்பெற்ற ஒன்பிளஸ் நிறுவனத்தின் 'ஒன்பிளஸ் 15’ என்ற புதிய ஸ்மார்ட்போன் ஐபோனுக்கு போட்டியாக அறிமுகமாகவிருக்கிறது. இந்தப் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சமூக வலைதளத்தில் பேசுபொருளை உரு... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து: கிரிசில்

கொல்கத்தா: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள அதித வரி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (கிரிசில்) தனது செ... மேலும் பார்க்க

ஈவுத்தொகையாக ரூ.3,248 கோடி அரசுக்கு செலுத்திய என்டிபிசி!

புதுதில்லி: அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனமானது 2024-25 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையான ரூ.3,248 கோடியை அதன் நிர்வாக மின் அமைச்சகத்திற்கு வழங்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து நிறுவனம் மேல... மேலும் பார்க்க

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 7% சரிவு!

புதுதில்லி: சூரிய சக்தி தகடுகள் இறக்குமதி மீதான வரி ஏய்ப்பு தொடர்பாக அமெரிக்க நிறுவனம் மீது விசாரணை நடத்தி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, உள்ளூர் வர்த்தகத்தில் வாரீ எனர்ஜிஸின் பங்குகள் கிட்டத்... மேலும் பார்க்க

வோடபோன் ஐடியா பங்குகள் 8% சரிவுடன் நிறைவு!

புதுதில்லி: 2016-17 வரையிலான காலகட்டத்திற்கான கூடுதல் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கோரிக்கைகளை ரத்து செய்யக் கோரிய நிறுவனத்தின் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததை... மேலும் பார்க்க