அஜித்: ``சினிமா, ரேஸிங் இரண்டையும் என் குழந்தைகள் மீது திணிக்க மாட்டேன், ஆனால்''...
Ind vs Pak: ``அவரிடமிருந்து ஆசிய கோப்பையை வாங்க மாட்டோம்'' - உறுதியாக நின்ற இந்திய அணி! - யார் அவர்?
ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதின.
இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதைத் தொடர்ந்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வி இந்திய கிரிக்கெட் அணியிடம் ஆசிய கிரிக்கெட் வெற்றிக் கோப்பையை வழங்கினார்.
ஆனால், இந்திய வீரர்கள் அவர் கரத்திலிருந்து ஏற்க மறுத்து, கோப்பை இல்லாமலே வெற்றியைக் கொண்டாடினர். இறுதியில் மேடையைவிட்டு இறங்கும்போது கோப்பையை எடுத்துச் சென்றனர். இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

யார் இந்த மொஹ்சின் நக்வி?
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவருமான மொஹ்சின் நக்வி, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைப் பேசக்கூடியவர்.
என்ன நடந்தது?
வெற்றிக் கொண்டாட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, மொஹ்சின் நக்வி மேடையில் பரிசுகளை வழங்க வேண்டிய மற்ற பிரமுகர்களுடன் இருந்தார்.
இந்திய அணி அவருக்கு அருகில் நின்றது. பாகிஸ்தான் அணி டிரஸ்ஸிங் ரூமில் இருந்தது. மொஹ்சின் நக்வி கோப்பையை வழங்குவார் என்று இந்தியர்களிடம் கூறப்பட்டதாகவும், அவர்கள் அதை நிராகரித்து, அவருடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்றும் கூறியதாகக் கூறப்படுகிறது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவர் என்ற முறையில், நான் மட்டுமே கோப்பையை வழங்குவேன் எனத் தன் நிலைப்பாட்டில் மொஹ்சின் நக்வி உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) முழு ஆதரவுடன் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதில் இந்திய அணி தெளிவாக இருந்தது. இந்த நிலையில்தான், இந்திய அணியினரின் செயல்பாடுகள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கின்றன.